Friday 7 October 2011

தாய்மடி

மண்ணில்பெண் தேடுவது
என்னவென்றறியாத காலதத்தில்
இதுவென்றது  காலச்சாரம்!!

அது பிழையென்றபெண்ணின்
இதயவாசலை!! மெல்ல திறந்து
தானென்றது அறிவுக்கண்!!

இயற்கைவாசல் தான் திறந்து
 சொல்லாது பெண்ணிற்காய்
கொடுத்தது அதுவல்ல இதுனென்று!!

எதையெடுப்பது என்றுதெரியாத
பெண்ணின் கைகளுக்குள் சிக்கிக்கொண்ட
இவ்வுலகிற்குள் நான் என்றது பத்துமாதம்!!

கடத்த பருவம் கண்ட ஆண்மை
பொய்யென்றது !சிதைக்கப்பட்ட பெண்மை
 வேடிக்காய் பார்க்கின்றது
 வரம்கொடுத்த இறையை  எங்கு காணவில்லை
!!
எங்கேயாவது தேடிபிடிப்பது என்று அழைகின்றது
காவிதரித்தஆண்மை !!!

 கொண்ட வாழ்வில் சிகரங்கள்
நாங்கள் எங்கின்றது பெண்மை!
 நாங்கள் இல்லா உங்கள் வாழ்வில்
எங்கே வரும் இனிமையென்று
வாதிடுகின்றது ஆண்மை !!!

வேடிக்கையான இறைவன்
ஒன்றுக்குள் ஒன்றைவைத்து
வேதனையாய் சிரிக்கின்றான் சிலையாய்!!

ஒன்பது நாள் என்ன ஓராயிரம் நாட்கள் விரதம்
கொண்டாலும் முடிந்ததும்         
விடித்ததும் யார்பெரிது என்பதே கேள்ளி?ஃ

No comments: