Thursday, 18 August 2011

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பஞ்சதிலும் பஞ்சம் மறக்கா 
பஞ்சனை தலையணையாய்
ஒர் காதல் !
 கற்பனை வார்த்தைக்கு
கைகொடுத்து பசியகற்றி
கனவாய் கதைசொல்லி 
பொய்யுக்குள் மெய்யென 
உயிர் பெற்று
உயிரோடு விளையாடி 
உணர்வு மயங்கி  உறவு  மறத்து
உயிரோடு உயிர் சேர்ந்து
உயிருக்குள் உயிர்பெற்று
உறவாகி கருவாகி கனியாகி
நிறை நிலாவாகி ஒளிபெற!!
குறைகண்டு பணம் தேடி
பதவிபெற்று அசிங்கமாகி
விரட்டிய விதியால்  அவமானச்சின்னமாகி 
அடிவயிறு  வலியாகி முத்தாகி
பூமியில்   பூத்தபோது!!
பசிதுறந்த   கேள்வியாய்
 தலைவிதி தான் நானாகி
பாதையோர அழுக்காய்
உயிர் துறந்த பெண்மைமுன்
மானம் தொலைத்த காமமாய்
பாடம் சொன்னது இது விதியென்று...
யார் இதை நம்புவார்?

No comments: