Thursday, 18 August 2011

வாசல்ப்படி

சுறற்றியவேலிக்குள்
சுவராய்பெற்றோர்
கட்டி நின்று காத்தபெண்கள்
 விடுதலை காற்று வீசிய திசையில்
வேண்டிய திசைகடந்து பறந்தால்!!

திசைகள் மாறியவாழ்வில்
சிதைகின்ற குடும்பங்கள்
நித்தமும் உழைத்த ஆண்மகனை
அவமான சின்னமாக்கியகதை
வீட்டிற்கு வீடு வாசல்படியானது!!

வாசல் தாண்டி இல்லாத குறைகூறி
குறையில்லா மகான்தேடி ஓடும் பெண்கள்
விட்ட பிள்ளையால்..அப்பா முருகனாய்
அம்மா வள்ளியாய் நித்தம் நித்தம்
 தேடுவது அப்பாவும் அம்மாவும்!!!

உழைத்து  உழைத்து சேர்த்த பணத்தின்
உயர்ந்த ஆடம்பரம் தேடிய  சந்தோஷம்
 வீடுக்கு வீடுவாசல்ப் படியானது இன்று!!!


No comments: