Wednesday, 1 October 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சாக்கடைக்குள்  எந்த 

வாசணை  கலந்தாலும் 

சாக்கடைகளே  பெரிதாதாய் 

வீசும்  இங்கே  

மரணங்கள் புதைக்கப்படும் 

 உண்மைகள் ஊமையாகும்

  வீரன் கோழையாவன் 

அறிவிலிகள்  அச்சம்

கொள்வார்  அறியாமை

ஆர்ப்பரிக்கும்   தவறுகள் 

சரியாகும்  சரிகள் 

தவறாகும்   தவறால்
தலைவன் 

கொள்கை இழக்க  இலக்கு 

இயலாமையிடம்  மண்டியிடை 

எந்தவர்ணமானாலும்  

விழுந்தபின்னர்  ஒரே 

நிறமே !!மாயைக்குள் விழுந்த  

  மனிதனை  எந்த மரணஓலமும் 

சிந்திக்க  வைக்காது !!! 

நல்ல  மனிதனேயானாலும் 

ஐந்து வருடத்தில்  மாறிடுக்க 

மனிதா!!!



No comments: