ஒருமுறையில்லை
பலமுறை கேட்டும்இல்லையென்ற ஒன்றே
இருந்தும் கிடைத்தும்
தெரிந்தும் முயற்சி மட்டும்
ஏன் எனக்கு !!
தோல்விகள் தரும் பாடங்களில்
இன்னும் கற்றுக்கொள்ள
உண்டா தோல்வியே !!
ஒருமுறையில்லை
பலமுறை கேட்டும்இல்லையென்ற ஒன்றே
இருந்தும் கிடைத்தும்
தெரிந்தும் முயற்சி மட்டும்
ஏன் எனக்கு !!
தோல்விகள் தரும் பாடங்களில்
இன்னும் கற்றுக்கொள்ள
உண்டா தோல்வியே !!
வாய்சொல்லிலில்
வீரர்கள்வீசிவிளையாடும் !
பொம்மைகள் பெண்மைகள்!!
களமின்றி காயமின்றி
தன்னை வீரராய்
காட்டிக்கொள்ள கையில்
போதையோடு தள்ளாடும்
களத்திற்குள் களமிறக்கி
வீரம்கட்டி விளையாடும்
விளையாட்டு பெண்மை !
இங்கே!!
அளிப்பதுவும் அழிப்பதுவும்
வீரனே !!
நாம் எதை
எடுக்கவேணுமோ
அதை விட்டு
எதை எடுக்க கூடாதோ
அதை எடுத்து
நம்மை நமே
அசிங்க படுத்தி
விளைடுகின்றோம் இதை
சிறப்பாய் உலகத்திற்கு
சொல்லுவதில் வீரமாய்
நிக்கின்றோம் இந்த
ஒற்றுமையை ஒருமுறை
நம் இனத்தின்பக்கம்
திருப்பினால் தமிழாய்
தமிழினம் சிறக்குமே !!!
விடியல்கள் வந்தால்
தோற்றுவிடும் மின்மினிபோல்வெளிச்சம் கொண்டாட
மறுக்கும் இவளும் !ஒரு
மினிபோலே வாழ்கின்றாள்!!
சொல்லுக்கு சொல்
தமிழை சொல்லும்மனிதனிடம் சொல்லாமல்
மறந்த நாகரீகம்
தடுமாறுகின்றது புதிய
வடிவத்தேடலில்!!!
விழுந்தால் உடையும்
என தெரிந்தே கண்ணாடிசிலையை விழுத்தியே
அழும் குழந்தையைப்போல்
சிலர் உடைத்தபின்னர்
சிதறிய கண்ணாடிக்குள்
உருவம் தேடியழுகின்றனர்!!
இவள் தொலைக்கும்
சந்தோஷங்கள் அனைத்தும்இவளுக்கு கிடைத்த
சாபங்களே !!
இவள் தொலைக்கும்
ஆசைகள் அனைத்தும்
இவளுக்கு எழுதமறந்த
இறைவிதியே !!
நீ தந்த மரணம்
என்னை மட்டும்
தான் தண்டிக்கின்றதாஇல்லை!!
ஒவ்வெறு மரணமும்
மனிதனை தண்டிக்குமா
இல்லை!!
தாய்மைக்கு
மட்டும் கிடைத்த சாபமா
இல்லை !!நான் தான்
பாவமா !!பதில் சொல்லு
இறைவா !ஒவ்வெறு காயமும்
என் அறிவை திறக்கமறுப்பதால்
உன்னிடம் கேட்க்கின்றேன்
என் மனதை என் மரணம் வரை
கல்லாக்கிவிட!!!
யாரோ எடுத்து !
தூக்கியே போடும்பூக்களோ!
பெண்கள் உணர்வுகள்!!
உங்கள் !!
கற்பனைக்குள் போட்டு
கசக்கியே ஏறிந்து
விளையாடுவதற்கு!!
கொஞ்சம் சிந்தித்தால்
கூட தோற்றிடும்
உங்கள் கற்பனை!!
இயந்திரமாய் போன
வாழ்க்கையில் ஓடமுடியாமல்
தடுமாறும் நிமிடத்திற்குள்
பயணிக்க வேண்டாம்
நின்று பாருங்கள் !சில
நேரம் நிஜங்கள் பேசலாம் !!!
நிறையவே ஆசைகளை
சுமந்தவள் கனவுகளைஇறைவன் காகிதகப்பலில்
ஏற்றியதால்
கண்ணீருக்குள் விழுந்தே
அழிந்திட்டதோ
இன்னும் அவள் கண்ணீருக்குளே
கனவுகள் மிதக்கின்றது
குடிசைகள் !
சாம்பலான மண்ணில்திசைக்கு திசை
வியப்புகள் வீழ்ந்துகிடக்க
வெளிநாட்டு கலாச்சாரம்
வீதியில் நிறுத்தியதால்
விழ்ந்து அழுகின்றது
தமிழ் !
வியர்வை சிந்தும் மண்ணில்
உதிரம் பயந்தும் கண்கள்
மூடிய பூனைகள் பாலோ
தமிழ்!
முதுமைகள் வாய்திறந்தால்
வார்த்தைகள் நாறுது
வலைகளில் வீழ்ந்த மீனைப்போல்!!
நாம் படித்தும்
நாகரிகங்களை கற்றும்
திரும்பி பார்த்து திருந்திடத்தான்
திருப்பங்கள் இன்னும் காணோம்
இருந்தும் வளர்ச்ச்சியடைந்திட்டோம் !
கண்ணீர் துளியின்
துளியே நீ விட்ட துளி
என்னுள் காயவில்லை
இன்னும் !!தனிமைக்குள்
உன் நிழல் குடைபிடிக்க
எப்போதும் ஏக்கங்களுடன்
உன்னைத் தொலைத்தே
தேடும் உன் அன்னை
அன்னையாகிய குழந்தையானால்
உன்னால் !!
இதுவரை எனக்கு
தேவையென்ற ஒன்றுதேவையென தோன்றவில்லை !
தேடிப்பெறாமலேயே
தேவதையானவள்
தேடிவந்து தேடித்தந்த
நினைவுக்குள் நின்றதாலோ
இல்லை அவளாய் நான்
இறந்ததாலோ பூக்களின்
மெத்தையில் பூவாய் போனவள்
பூக்களில் வண்ணத்தில்
எண்ணமாய் வாழ்கின்றாள் எனக்குள் !
ஏமாற்றத்தின் உச்சத்தல்
எதிர்பப்ப்பின் தோல்விகொலைசெய்யப்பட்டபின்பே
வாழ்கை சந்தோஷத்தை
தேடமறுக்கின்றது !!
அவன்!! என்னையும்
என் மனசையும்புரியவில்லைதான்
என் மனசுபுரியும்
போது !
அவனோடு!!
நான் இருக்கவில்லையென்றாலும்
அவன்!
வாங்கும் பூக்கள்
சொல்லும் என் மனசை!!
என்னும் நம்பிக்கையே
அவனுக்கும் எனக்குமான
இடைவெளி !!
வேண்டாம் என்றால்
இறைவன் வேண்டுமென்றுசெய்கின்றான் !
வேண்டும் என்றால்
இறைவன் வேண்டவே
வேண்டாம் என்று
செய்கின்றான் !!!
சொல்லாமல் வந்து
சொல்லுக்கு சொல்லுரசனையாகி சொல்லியே
தமிழோடு விளையாடி
கை பிடிக்காமல் கண்கள்
பாராமல் என்னோடு
நடந்து திரும்பி பார்க்கும்
ஏடுகளுக்குள் ஓடாமல்
ஒழியாமல் இருக்கும்
ஒற்றை நட்பு இருந்தால்
தானோ எழுந்து நடத்தேனோ
ஆண்மைகளை கடக்கும்
போது! இறைவனை திட்ட
தோன்றும் அப்போது வந்த
ஆண்மை நிந்திக்காமல்
சிந்திக்கவும் வைத்து
இருந்தும் ஒரு பிசாசின்
நல்ல உள்ளத்திற்கு
நன்றிகள் பல !!!