Thursday, 3 April 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அறிவியல்  காத்திடா 

துயரம்  அழகிய  தாய்மையின் 

நிரந்தர  தூக்கம் !!

இந்தக் கொடுமையின் 

தாலாட்டுக் 

கேட்டு நினைவுகள்  

அழுத்துகின்றது !

ஒரு  அன்பின் முகவுரை 

உறைந்தது தானாய் !

பிரிவுகள்  தொடர்கதை  

இருந்தும் 

 தேடுது  தேடுது  இதயம் !

உறவுக்குள்  சிறந்த  உயிர் 

உறவாய்  என்னை ஏந்திய போது 

உலகில்  இதைவிட  ஒரு 

தாய்மை  இருப்பதாய் 

தோன்றவில்லை  எனக்கு!

இப்போ  நிரந்தர  பிரிவில் 

பிரிந்தவர்  உறவுக்குள்  

உறவாய்  செல்லுகின்ற 

என்  தாய்மைக்கு  

பூக்களால்  மன்னிப்பு !!!



  



No comments: