பிறப்பை கொண்டாட
வேண்டாமென்றே இறப்பை
தந்தான் இறை!!
சரியென்றேன்!! ஆனாலும்
ஏனோ என் பிறந்த தினத்தில்
இறப்பயே பரிசாக்கின்றான்
மீண்டும் மீண்டும் ஏன்தான்
கோவமோ என்னோடு
அனாலும் நேசத்தை
கற்று கொடுத்த உயிரை
என்னோடு சாம்பலாக்கிய
இறையே உயிர் உள்ளவரை
மாறாத நினைவுகள்அதிகம் தான் ஆனாலும்
ஏந்துகின்றேன் என் மாமியின்
நினைவையும் இன்று !! இன்றைய
சம்பலுக்குள் மீண்டும்
என் உயிர் பிறக்கின்றது
மாமியின் நினைவுக்கண்ணீரின்
பூவாய் !!!
.jpg)
No comments:
Post a Comment