Wednesday, 26 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......


 விரிகின்ற 

 நினைவலைக்குள் 

விடியாமேலே  விளையாடுது 

அவரவர் ஆசைகள் 

நினைத்த நினைவிடம் 

தோன்றிட முடியாததால் 

கோவமும் வெறுப்பும் 

தேடுது வாழ்ந்திட 

Tuesday, 25 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்  போகும் பாதை 

அவளே தேடியதாய் 


சொல்லும் மனங்களுக்கு 

புரியா கேள்வி  அவளும் 

தெரியா  விடைகளே  !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வாயடிப்பெண்ணென 

வார்தைகள் தொலைத்தவர் 

சொல்லிட  மொழிகள் 

கற்றிடா  கருவாச்சி 

கற்றுக்கொண்டாள்  மொழிகளின் 

அழகிற்குள்  விளையாட 

விளையாட்டு  புரியாமல் 

மொழிகள்  சிக்கிக்கொண்டது 

விழிகளுக்குள் !!!
 

Monday, 24 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சின்னவயது தொட்டு 

திருவோடு  வாழ்கை

ஒருநாள்  மாறிடாதயென 

ஏக்கங்களோடு  முதுமைவரை  

 போராடியே ஓடிக்கொண்டே 

இருக்கும்  பெண்னை பார்தே

சும்மாய்  இருப்பதாய் 

 சொல்லும் போது 



புரிகின்றேன்  பெண்ணே  வீட்டில் 

இருக்கும்  உன்னை!!

பெண்ணின்   உணர்வுகள் 

மரணம்  வரை  வலியின் 

பிறவியே !!

கைகள்  சோரும்  கால்கள்  வலிக்கும் 

ஆனால்  முகங்களில் 

புன்னகையை  தேடுவதே 

புரிதல்   படைப்பில்  படைக்கப்பட 

உயிர் !!!

Friday, 21 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வார்தைகள்  தேய்கின்றது 

மனசுக்குக்குள் கவலைகள் 

வாட்டுவதால்  
எண்ணங்கள் வாடுக்கின்றது   

வாழ்கை! கரைந்தோடும் 

 தனிமைகளை சொந்தமாய்     

கொண்டதால்! 

நியமென   சொல்லி  மகிழ்ந்திட

 நியமாய்  எதுகும்!  அவளுக்கென்று  

இல்லாமல் போனதால்  

தனிமையில்  வாடுகின்றாள் !!







Thursday, 20 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

அவன்  பொய்களை 

நம்பியே  நடந்தவள்  



அவனின் உண்மைகளை  

தேடவில்லை!!அவன்   

நம்மிடமால்    நடக்கும் 

தூரம்!!!அவள்  என்பதால் !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஐயோ பாவமென 

உச்சரிக்கும்  வார்தைக்குள் 



ஒளிந்துள்ள பொய்யை போல் 

ஒரு  உண்மை  ஏதிலுமில்லை !!
 


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அழகான நாட்களை 

கையில் அள்ளியவள் 

நாட்கள்  ஏழுதா கனவானது !

எழுதகனவு   

தருகின்ற போராட் டம் 

கண்ணீப்பயணமானது!! 

இதையறியாமல்  அவள் 

தடுமாறியே  நாட்கள் 

அவளுக்கு கற்று  தந்த நிமிடம் 

 உயர்வான பாதையாகின்றது  

இருந்தாலும் !

மனசு நிலையாக 

கொடுத்த நிமிடங்கள் 

விலைமதிப்பற்றது 

அவள்  புரியாமல் 

அவளை  புரிந்தவர் 

கற்று  தந்தது  ஏழுத்தில் 

அவள்  ஏழுதாத
ஏடானது !!!

Wednesday, 19 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பட்டுடன்  கைவளையல் 

அழகு சேர்க்க  கார்கூந்தல் 

தன்னை மறைத்து 

மல்லிகை புன்னகைக்க  

பாவையவள் கோயில் 

சென்றாள்! கால் நனைத்த 

நீர்த்துளி  தரையில் சிந்த 

கோபுரங்கள் தலைவணங்கி  

முதல் படியில் கால்வைக்க 

கண்ட  கனவிற்க்குள் 

கனவாய் போன உருவம் 

கண்ணெதிரே தோன்றக்கண்டாள்  

பார்ததும்   தடுமாறியே 

எடுத்தபாதம் தரை தொடாமல் 

ஒருநிமிடம்  தனை மறக்க 

நிழலாய்   போன  நியம் 

எதிரே திரும்பி பாராமல் நிற்க

ஒற்றை சொல்  உயிர்  துறக்க 

எடுத்த பாதம் நடைபயில 

கிட்ட  சென்றவள் பார்த்த முகம்

 ஒற்றை நிமிடக்கற்சிலையாக்க 

சடடென விழித்தவள் விழிகளில் 

கனவின் இருள் நீரை துடைத்தது !!!




Tuesday, 18 June 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............

என்  வரைபடத்தில் 
 இதுவரை   வெற்றிடமாய் 

இருக்கும்  உறவு  அப்பா!!

என்  கைகள்  

 யார்  கைபிடித்தலும் 

என்  கைகள் பிடித்து 

நடக்க துடிக்கும் உயிர்  அப்பா!!

முகம் தேடி வழிபார்க்கிறேன்

 விழிதூங்கிட ஆனால் 

 மரணம்  களவாடி   சென்ற 

உயிர்  அப்பா!! 

மரணம்  தத்தெடுத்து  தடுத்தபோதும் 

 என்  தலை கோதும் விரல்  அப்பா!!

யார்  வலிதந்தாலும்  நான் 

அழும்போது  அருகே உணரும் 

பரிசம் அப்பா !!

இருந்தவரை  சண்டை போட்டே

சமாதானம் ஆகா  உயிர் அப்பா !! 

தலை சாயாந்தே  தூங்கிட 

  கேட்கும்   ஆறுதல்  மடி

அப்பா ! இதுவரை  நான் 

தேடித்தோற்ற  அன்பின்  உணர்வு 

அப்பா !!





Monday, 17 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 புரிதல் எதுவென 

தெரியாமலேயே  புரிதலை 

  புரிந்து  கொண்டே 

புரியாமலே 

வழக்கை  நகருகின்றது  வார்தைகளையை 

புரிந்தபடி !


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 மற்றவர்கள்  சந்தோஷங்கள் 

எதுவென தெரிகின்றது 

என்  சந்தோசங்கள்  இதுவென 

அறியாமலே  கடக்கின்றது 

நாட்கள்  சொன்னாலும் 

புரியா  உ றவுகளே  

உறவாய்  அமைந்தாலோ  

மௌனகளாகவே  நடக்கின்றேன் !! 

யாரும் இல்லாதே  வாழும் 

வாழ்கை   ஒருவலி 

 இருந்தும் இல்லாத  வழக்கை 

மரணவலி  இருந்தும்  

எனக்கு  வரமாய் கிடைத்தவராம் 

தனியாய்  கொடுக்குது 

அதையே  வாழ !!!

  

 


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மறுப்படி ஒரு ஜனம் 

மன்னித்து  தந்திடாதே 

இறைவா  மண்ணில் 

கோடியின்பம்   எதுவென 

தெரியவில்லை  இருந்தும் 

நீ  கொட்டிசென்ற

  துன்பசசிதறலுக்குள் 

தொலைந்த  என்னை 

மீண்டும்  மீட்டும்  அழகியலில் 

ஒரு காலைபூ பூக்கவும் 

இல்லை 


 

கருணை இருப்பதாய் 

ஒரு  விடியல்  விடியவுமில்லை 

கண்டதும்  கேட்டதும் 

கனல் நீரோடைகளே 

கருவில்  வரைந்த  அழகு 

மரணம்  தாங்கும் 

அழகு 

Saturday, 15 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,


 நடக்காத அசைகளே

என் கனவுகளாய் மலர்கின்றது

என  உன் கைகள் பற்றி நடக்கும்

கனவு சொன்னது!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என் விழிகள் குருடாய்

இருந்திருந்தால்  உன் 

விம்பம்  என்வழிகளில்

விழுந்திராமல் இருந்திருக்கும்

நீ விழுந்திடாமல் இருந்திருந்தால்

நான் இல்லா  உன் உலகம்



எனக்கு வலியை  தந்திருக்காது

என்னை தெரிந்தே  நீ  

வலிகள்  தந்து  விலகி 

போகின்றாய் !!!நான்

என்ன செய்வது இதுக்கும்  

கடக்கும் என 

என்னை ஏமாற்றுகிறேன்

உன்னை நேசிப்பதால்.........


Wednesday, 12 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,


உழைப்பில்  கிடைக்க 

உயர்வு  எமாற்றுவதில் 

கிடைப்பதால்  தான் 

உழைப்பை  நம்பமறுக்குது 

மனசு !!1


 


Tuesday, 11 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,


 அவள்  உயிர் பெற்றபோது 

தூங்கிய  இறைவன் 

இன்னும் எழுந்திடவில்லை 

அவள் உயிர்விடும்போது 

எழுவனோ !!




குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்  வழக்கை 

அர்த்தங்கள்  புரியாமலேயே 


அவள்  வாழ்க்கை  


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பெண்ணவள்  கனவுகள்  அவனுக்கு 

தெரியாமலேயே 

 கவிதைகள்  புரிவதாய் 

கற்பனைகளை தேடுகின்றான் 

 பெண்ணவள் உணர்வுகள்

  அவனுக்கு   புரியாமலேயே 

பெண்ணவளோடு வாழ 

 வாழ்வைத்தேடுகின்றான் 

பெண்ணவள் உறவின் 

அர்தங்கள் அவனுக்கு 

 புரியாமலேயே பெண்ணவள் 

  உறவினைத்தேடுகின்றான் 

அன்னையவளை  நேசித்தே

அன்னைபோன்ற   பெண்ணை

 புரியாமலேயே  அவன் 

பெண்ணவளை 
நேசிக்க 

தேடுகின்றான்!!!  

 



Monday, 10 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


வையத்திற்குள் 

 எதையும்  இழக்கவரைதான் 

பெண்ணின்  வாழ்க்கை 

 இழந்த பின்னரோ 

பெண்ணிற்கு  மட்டுமே 

நரகம்!

பெண்ணிற்கு  சொர்க்கமும் 

நரகமும்  ஓரிடம்

 புரியா  மனிதனின் 

உறவே அதிகம் 

புரிந்தவன்  இருப்பதோ 

கனவுலகம் !


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 இட்டவன்  எடுத்த திலகம் 

மற்றவன் வைக்க  

அஞ்சும்  திலகம் 

என்றைக்கும் அவளுக்கு 

சாபங்களே!! 

என்றாலும் 

சாபங்களை கொண்டவளுக்கு 

நேசிப்பவன் கொடுக்கும் திலகம் 

ஆயுள்காலவரமாய் 

கொடுத்தானாம்  இறை 

பெண்ணின் சாபங்களை 

போக்க!! 

இருந்தும்  பெண்ணின் 

வாரமே  மண்னின் சாபங்கள் 

காலங்கள் மாறியும் 

மாற இரவுக்குள் பெண்மை 

மாற்றத்தை தேடிக்கொண்டே

தோற்கின்றது !!!



Wednesday, 5 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வலுக்கிவிழுகின்றது

 வார்த்தைகள் 

சறுக்கியேயோடுகின்றது

 காதல்  

குழிகள் நிரம்பியே  

வழிகின்றது  சுவைகள் 

 பார்த்தும் நிக்கின்றது 

விழிகள் 

காணாதே போன 

தமிழை கணத்தேடு 

கண்கள்  விழுந்த 

அருவிக்குள் அடித்தோடிய 

நீரை  தடுத்தெழுத்தே 

ரசிக்கச்சொல்லுது 

கற்பனை !!!





விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,




ஒருபெண்ணை 
வைத்திருக்கின்றேன் 
என  சொல்லும் வார்த்தைகள் 
சாதரணமானதே இப்போது 
கேட்பவருக்கும் சொல்பவருக்கும் 
ஆனால் அந்த பெண்ணிற்கு
அதை விட ப்பெரிய 
தண்டனை  ஒன்று 
கிடைக்குமா எனத்தெரியவில்லை 
பெண்ணுக்கு எதையே 
கொடுப்பதாய் ஏமாற்றும் 
மணிதமே  இன்றுவரை 
எதையும்  புரியாமலே 
விழ்த்துகின்றது 
அவளை சுற்றி போடும் 
மாயா பொய்கள் 
தெரியாமலே தன்னை 
மண்ணில் தொலைத்து 
கனவுகளில் வாழ்கின்றாள் 
ஆனாலும்  பெண்னே
நீ  உணராமலே 
மறைகின்றதால் மீண்டும் 
மீண்டும் சிறைப்படுது பெண்ணின் 
வாழ்க்கை 

Tuesday, 4 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விதியால் பின்னிய 

சிலந்தி வலைக்குள் 

சிக்கிக்கொண்டதால் 

 பனியால் மூடப்படட 

பூப்போல்  மூடிக்கிடக்குது 

மனசு!!!


Monday, 3 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

என்னோடு! 

 இருக்கோ  இல்லையே 

இயற்கையே  உன்னோடே 

காதல்  நீவருவாயோ 

உணர்வாயோ காப்பாயோ  

கல்லென  நிற்பாயோ 

காலமெல்லாம் 

 காத்திருக்கவைப்பாயோ 



வாழ்நாள்  துன்பத்தை 

தருவாயோ 

 காலங்களை  கண்ணீரில்  

கரைப்பாயோ விழுந்த

உணர்வினை மீட்டும் வீணையாய் 

காவியங்களே 

 பொய்  சொன்னாலும் 

 காதல் 

என்றும் உன்டனே !!!