Thursday, 29 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 யார்விழி

யாரையே தேட 

யார் இதயம் யாரோட சோர

 பேசாமல் மொளனித்து

ரசித்தவள் ரசனையை  தேடுது

இருவிழி. 

கல்லுக்குளும்  ஓரு ஈரம் 

மழைநீர் படாமல் பரவுவதை

தடுத்திட முடியாமலே வருகின்றது

தானாய்

 தள்ளியே அழித்த ஆசை

அள்ளியே எடுத்திட   

இறந்திட்ட பூவிடம்  கையெழுத்தை

கேட்பதைபோல  

முடித்திட்ட புத்தகத்தின்  முகவரியை

தேடுவது போல் 

வந்தது  நானடி!!!!

புன்னகைகொன்றே

மண்ணிலும் வாழும் மனிதம்

உண்மையடி!!!


No comments: