எல்லாத்தடைகளையும்
உடைத்து
வெளிவரும் மனிதனின்
கோவமும் வெறுப்பும்
நிதானத்தை இழக்கசெய்கின்றது!!
செல்வாக்கு வாக்கு
உயரும் போதுசொல்வாக்கு மேன்மையானால்
விழும் வாக்கும் உயரும்
கல்லடிபட்டாலும் கயவனென
கத்தினாலும் வில்லெடுத்து
வைத்தகுறி கிளியானால்
கிளைக்கு கிளைதாவும்
மிருகமும் தெரியாது !!
விளையாட்டை விளையாட
உண்மையும் நேர்மையும்
வில்வித்தை குறியில் சொல்வித்தை
அம்பின் விசையானால்
விழுவது கிளியே !!!!
இதுவரை நடந்தது
நடக்கபோவதும் எதற்கெனத்
தெரியாது
வார்த்தைகளில்
நல்லவராய்
மனசில் கெட்டவராய்
நல்லவர் போல் வாழ்வதும்
காலம் கற்றுக்கொடுப்பதும்
எண்ணி நடப்பதும்
நாளை காப்பாற்றாமல்
போவதும் நம் கையில்
இல்லையென்றாலும்
இலக்கும் வேணும் நமக்கு !!