ஒரு நிழலின்
நியாயம் நியமானால்,
ஒரு இருள்
மின்னும் ஒளி,
பல இருளுக்கு
வெளிச்சம்..."
ஒரு நிழலின்
நியாயம் நியமானால்,
ஒரு இருள்
மின்னும் ஒளி,
பல இருளுக்கு
வெளிச்சம்..."
விதைத்த விதையின் மேல்
நீரை தெளித்து விட்டு
உழவன் இயற்கையின் நிழலில்
காத்திருக்கின்றான்
முத்து ஒன்று
ஓசையில்லா அடியில்
தன்னை மூடிக்கொண்டே
வாழ்கின்றது
தன் மூச்சுக்காற்றை
இழக்கத் துணிந்தவனே
முத்தின் மதிப்பை பெறுகின்றான்
சில நேரங்களில். உயிரோடு
உறவு நடத்தும் யுத்தம்
ஆன்மாவின் ஓசையில்லா
முத்து
பொறுமைகள் வெகுமதியாகலாம்
இழக்கவும் செய்யலாம்!!!
ஏளனம் செய்யும்
உலகாகிற்குள்
எறும்படிகளில் கைகள்
பிடிக்கும் கைப்பிடி
உண்மையின்
கைகளால் கட்டுண்டால்
உறவின் பலம்
பிரியதுடிக்கும் உறவையும்
சேர்த்திட துடிக்கும்
அழகியலின் சிகரம்
இதை எத்த முற்போக்கு
மனிதனாலும் கொடுக்கமுடியா
தமிழின் அறம் அதுவே
நம்மை கட்டிப்போடும்
இல்லறம் இதை புரிந்தவர்
விட்டுகொடுத்து போகின்றார்
புரியாதவர் விட்டுவிட்டு
போகின்றனர்
தவறுகள் கற்றவரகளால்
திருத்தங்கள் திருத்தலம்
ஆகும்!!!
விழுந்து விட்ட
கண்ணாடி சிலை போல்
நம் மனசு
பல நூறு விம்பங்களாய்
மின்னும் நாம் உணர்வுகளின்
விதைகள்
அதில் ஒரு விம்பத்தை
மட்டும் விழுத்தும். அன்பு
நம்மிடம் மட்டும் உள்ளது!!!
விட்டுவிட்டால்.
தவறான உருவைத்தை நமக்கே
உருவாக்கி காட்டிவிடும்
அப்புறம் பொருத்தினால்
அழகிழந்த உருவம்
நாமவோம் அறிவின்
கைகள் தேடட்டும் நம் மனசின்
கண்களை
இவள் தனிமைக்கு
துணையான தமிழே
உன் இதழுக்குள். விழுந்த
பனித்துளி நான்
சிலநேரத் தவறோ சரியோ
விழுது விடேன். மீண்டும்
வழிந்தோடிட என் இதயபூவில்
இருந்து உன்காய் ஒரு தீபம்
நான் !!நீயில்லையெனில்
மண்ணில் மரணித்து
போய்யிருப்பேன்
என்பதால் !!
என் வழியின் ஒளியே உனோடு
நான் என் நாளும் காதலாய் !!
அதிகாலை தலைகுளித்து
மல்லிகை கூந்தல் பூக்க
அவள் இட்ட திலகம் கண்டு
ஆதவன் வெக்கப்பட
ஐந்து வகை சுவை தனை
செய்து ஏழைமகள். நடந்தாள்
உழைக்கும் மாமன்
இருக்கும் இடம் தேடி.
திருநாளும் இல்லை
ஏழ்மை வாசலில்
என்பதால் இல்லை
உழவனுக்கு. இல்லை
ஓய்வு. என்பதால் மாமனுக்காய்
அதிகாலை பனிக்காற்று
உடல் தொட்டு பேசும்
பூக்களின். நடுவே
கட்டிய வேட்டியின் வெண்மை
களவுபோன வண்ணத்தில்
மாமன் ஒற்றையில். நிற்பதை
நினைத்து. தான் நடந்தாள்
தேவதைபோல் திபத்தீரு நாளில்
மாமன் தனியே வாடிட கூடாதே
என்று!!
வலிகளோடு போராடும்
இதயங்களில்
சொல்லாமல் சிந்தும்.
மொழியில்லா கண்ணீருக்குள்
வழிந்தோடும். மௌனத்தின்
சத்தங்கள் மகிழ்வாய்
ஆனந்த கண்ணீரில்
நனைய
இறைவா உன் பாதங்களில்
நான் ஏற்றுகின்றேன்
ஒற்றை தீபம்.
ஆணவம் வேண்டாம்
அடிமை தனம் வேண்டாம்
ஏழ்மையின் வறுமையும்
கொடுமையும் வேண்டாம்
ஒற்றை மனிதகுலம்
ஒன்றாய் சிந்திக்கும் ஒளியாய்.
ஒளியே
நீ உலகை வெல்ல என் தீபம்
இருளை போக்கிடும்
ஒளியாய் உள்ளங்கள் வெல்லட்டும்!
மலரும் பூவின்
மென்மையென
இதயங்களை நேசித்தவள்
பூக்களிடம்
மன்னிப்பு கேட்கின்றாள்
முழு அமாவாசை
ஒற்றை இரவில்
தூக்கம் இல்லாமல்
தனித்து நின்றவள் கண்ணில்
விழுந்தது நட்சத்திர வெளிச்சம்!!!
சகி!! பூக்களின் உயிர்
பறிக்கும் வரை
இதுவே அதன் விதி!!
ஒன்றை கொன்று ஒன்று
வாழும் நியதியே உயிரின்
படைப்பு !! நீ குழப்பத்தில் உள்ளாய்
அதுவே உன் கேள்விக்கு
இல்லை பதில்!!
புரிகின்றது நண்பா
வாழ்க்கை வீழ்த்திடும்
வேகம் நாம் எழும்பிட வரும்
குழப்பம் மீண்டும் நம்பிக்கை
கொள்வதும் கடினம்
அன்பிற்கும் வேசத்திற்கும்
வித்தியாசம் காண குழப்பம்
ஒருவர் தனக்காய் தேடும்
சந்தோசம் மற்றவருக்கு
துன்பம் தரும் என்ற துன்பம்
என்னை விதியாய் திறத்துகின்றது
மதியால் வென்றாலும் புரியா
மனிதன் விதியோடு மோதுகின்றான்
என்ன செய்ய முடியும்!!
சகி !!
தனக்காக சிந்திப்பவன்
எப்பவும் சுனலமாகவே இருப்பான்
நீ எல்லோருக்கவும் சிந்திப்பதால்
குழப்பம் கொள்கின்றாய்
உனக்கா சிந்தித்து பார் தவறுகளும்
சரியாய் தெரியும் அப்போ அவனும்
உயந்தவன் ஆவான்
வேண்டாம் நண்பா
ஒருவர் அழும் கண்ணீருக்கு
இல்லை வில்லை ஆனால் அந்த
பாவம் நம்மை கூட்டி செல்லலும்
பாதை வேண்டாம் மனிதனாய்
வாழா விட்டாலும் ஒரு
மின்மினி பூச்சி போல் வாழ்வோம் !!
கருவிழி
இருளுக்குள்
மழைத்துளியின்
முத்தம்
என் கண்ணத்தின்
கண்ணீர்த்துளி
வானம் தந்த சீதனம்!!