Tuesday, 21 April 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வில்லவன் சொல்தனைக்களவாடி
வண்ணர்க்கைகுட்டையாய்
நெய்தே விண்ணகம்  விட்டேன்
 பட்டமாய்!!!
எட்டாத வானவில் - காதல் கவிதை!!அச்சச்சே  மண்ணகம்
வந்த தென்றலுக்கு என்ன கோவமே
என் பட்டமதனை களவாடி செல்கின்றதே

உச்சத்தின் அசச்சத்தில் ஏக்கமாய்
கண்மூடியே அழுதேன் குழந்தைபோல்

விழிதிறந்து வழிந்த விழித்துளியை
மண்சேராதே கார்மேகம் கரைத்திட
சிந்திய  தூவானத்தில்  கொஞ்சம்
சிவந்த உதயத்தால்  நிமிர்ந்த  கண்கள்
வழியும் நீரோடு  நோக்க!!

 வானவில்  மாலைக்குள்  நான்
சூடா மலர் போல  இதழ் துடிக்க
துள்ளிக்குதித்தது இதயம் தொட்டிடா
வர்ணத்தில் வளைந்த வர்ணங்களை கண்டு!!!

No comments: