Sunday 29 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இக்கரை கடந்து 
அக்கரை போனதால்
இக்கரையை மறந்தவர் 
 நாகரிகம்!!
உழவன் எக்கதியானாலும் 
 கவலை  கொள்ளா 
தற்பெருமை ஆனது!
என்மாமன் மண்குளிந்து 
சேற்றில் நிற்பது கண்டு
அசிங்கமாய் முகம்சுழித்து
கிண்டல் பேசிய
இக்கரை மறந்தவர் செயல் கண்டு
கொஞ்சம்  மண்வாசனையை
காட்டிட நான் வயல்வரப்பேற
சட்டென மாமன் புன்னகைத்தார் 
நெற்செய்கைக்காக வயல் வேலையில் ...கண்மொழியாடையில்
மண்ணின் மொழிகண்டேன்
அவர்கண்களுக்குள்!
கைதொடாதே உண்ணும் பழகத்தை
கடனாய் வாங்கிவிட்டோம்
கைகழுவிட சோம்பறியானதால்
உழுதே உண்பவர் வாசணையை
கண்டால் பிடிக்காதே  போனது!
மண்தொட்ட கையெடுத்து  
முத்தமிடதோன்றியது
எனக்கு! மாமன் கைபட்ட
நெற்கதிர்கள் பொன்னாக
நான் மாமனின் கண்மணியானேன்!!!


No comments: