Saturday, 21 December 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தனக்கான தன்னை

 தனக்காய் வாழ சிந்திக்கும் 
தனக்கானவனே!
தன்னையே நம்பிய உறவிற்கு
உறவை கொடுத்திட மறுக்கின்றான்!!!

சுற்றமும் சுழலும் சுற்றுவதே
நாமென சொன்னவனே
அவளை தள்ளிவைத்து 
 உள்ளோடாமல் தனியாக 
சுற்றியே திரிகின்றான்!!
மற்றவர் நேசத்தை தன்னுடையதாய்
எழுதியவனே 
தன்னுடைய நேசதை
கொடுத்திட மறுக்கின்றான்
அவளுக்காய்  மற்றவருக்கு முன் !
நித்தமும் தனியவன் என்பவனே
ஒரு கூட்டத்தின் நடுவே 
 நித்தமும் வாழ்கின்றான்
தேவைக்கேற்ப!!
ஒற்றைக்கு ஒற்றையாய் 
வாழ்ந்தவர்
தன் உணர்ச்சியை அழிந்தே 
அகிலத்தை வென்றனர் இங்கே 
ஒற்றையென்பவர்கள் 
பலர் உணர்வை 
எடுத்தே நிக்கின்றனர்
தனியென்று!!!

No comments: