Wednesday 18 December 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

பட்டணத்தை விட்டு. ஆடம்பரத்தை விட்டு 
 ஊரைத்தொட்டு   வயலைத்தொட்டு 
என்  மாமன்  ஏரைத்தொட்டு  
காளைபூட்ட என் கண்கள் 
மாமன் அழகைத்தொட்டு
வார்த்தை பட்டு ஊமைக்கொக்கைபோல் 
நிக்கின்றேன்  உள்ளம்கெட்டு 
எண்ணம் மலர!!

திண்ணைக்கு திண்ணை திண்டது செமிக்க
 கண்டதை பேசிகாலத்தை போக்கிய காலம்
காணமல் போயியும் !!கண்டதைபேசி
Bildergebnis für வயல்காலதைபோக்க எதை எதையே தேட
வலைக்கு வலையழைகின்ற
சிறுதும் பெரிசும்  வாழ்கையை அங்கங்க
தொலைத்து தேட!

என் மாமன் கற்றதை விட்டு 
கம்பீரமாய் வந்தான்  ஊரைத் தேடி 
வெங்காய பேச்சை
தெருவுக்கு தெருபேசி 
ஆடையில் மண்னெட்டாது 
அழையும் சிந்தனைவாதிகளை
கடந்து  பட்டணம
 விட்டு பட்டிக்காடு தேடிவந்தான்
உழைக்க!!

கையில் உணவையெடுத்தால் 
நாகரிகமில்லையென
கையும் உணவும் சண்டைபோடும்
காலத்தில் சேற்றில் இறங்கிவேலைசெய்திட
வந்தான் கம்பீரமாய்!!
ஒற்றை ரோயாவில் மாமன் முகம் பார்த்து
ஒராயிரம் கதைசொல்லியவள் கற்பனைக்கு
உயிர்கொடுத்து நிக்கின்றான் வியர்வைத் துளிசிரிக்க
என் முன்னே!!

No comments: