இதயத்துளி
சுட்டிக்கதையாகி
சுட்டிக்கதையாகி
சுடரில்லா ஒளியாக்கி
வெட்டிப் புதைத்த நினைவாகி
தட்டித்தட்டி உயிராக்கி
மெல்லக் கனவாக்கி
கற்பனைக்குள் சிறகாக்கி
எடுத்தென்னை உறவாக்கி
சுட்டு எரிக்கும் தீயாக்கி
எரிந்த சாம்பல் வாழ்வாக்கி
பின் தள்ளிக் கண்ணீர்க்
கதைசொல்லி
கதறும் மனமதனை
விட்டுப் பிரித்து தவிக்கவிட்டு
தவிக்கும் எண்ணத்தை சுயநலமாய்
அழித்து திரும்ப திரும்ப
பிரியா மணலால் கட்டி
துடிக்க துடிக்க எரியும்
வலிகள் கொண்டுத்தும்
என்று துடிக்கும்
இதயம். நீயேயானாய் ..............
.jpg)
No comments:
Post a Comment