Thursday 17 May 2012

பந்தம்

ஆண்ஐாதி பெண்ஐாதி
உலகிற்கு இருஐாதி அப்பாடி!!
ஆணும் பெண்ணும்சரிபாதி !!
இருந்தும்!! ஏன் ஓர் பொய்ப்பாதி!!

சிவனுக்கு சக்தி சரிபாதி
இருந்தும்!! பிறந்து பிரிந்து
சோருவது  எப்பாதி!

முருகனுக்கு வள்ளி சரிபாதி
இருந்தும்!!தெய்வானை ஏதற்காய்
ஓர் பாதி!!
கண்ணனுக்கு ராதை
உயிர்ப்பாதி இருந்தும் !! ஆண்டாள்
எதற்காய்பாதி!!

கோவலுக்கு கண்ணகி சரிபாதி
இருந்து்ம் !!மாதவி யாருக்காய்ப்பாதி!!

இப்படி! அக்கரைக்கும்
இக்கரைக்கும்  இடதிற்கும்
வலதிற்கு்ம்ஒர் பாதி பாதியாய்
நிற்கும் கதைகள் சொல்லு்
பாதிப் பெண்களின் பாதிவாழ்கைக் கதைக்கு
 எப் பொருள் முப்பொருள் காண
இப்படைப்பு......
..
பாவையவள்  படைப்பின்
பாவக்கதைகள்  சொல்லும்
பொல்லாத உலகிற்குள்
பொருந்த வாழ்கைக்குள்
 சற்றும் நில்லாத காற்றைப் போல்
முன்னாடி பின்னாடி தள்ளாடி
கொஞ்சமும் குறையாத பாசம்
இல்லாது போனதால் என்றால்???????????

எதைவைத்து யாரைப்படைத்தான்
இறை!!
எதற்காய் இந்த வாழ்கை
யாரை யார்வெல்ல வந்ததிந்த
மனுடம்  !!
கரையும்மனதிற்கு பிடிப்பதெல்லாம்
அறிதும்அறியாமை கல்வியா................?


No comments: