Friday, 17 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தை பிறந்தால்  வழிபிறக்குமாமே 

ஆனால்  எனக்கு  மட்டும் 

வழிகளை பனித்துகள்

  மூடியேவைத்துள்ளது

அதிகாலை  சூரியன் 

உதிக்க மறக்க 

நிலவு மட்டும்  தன் 

ஒளியிழந்து  நிக்கின்றது 

என்  முன்னே 

காலை  மாலை 

தெறியாமல்  போகின்றேன் 

தனியாய்!  கருணையும் 

கடலும்  கறுப்பாய் 

 என்கண் முன்னே இருக்கின்றது

இருந்தும்  முதுமை

  தூக்கம்  தேட 

வயது  கொச்சம்

  ஓய்வை தேட 

ஓடுது  நாட்கள்

 காரணப்பிழையாய் !!

தையும்  போகும்  

 வருடமும் முடியும் 

வாழ்க்கை  சக்கரம் 

 என்  பிழைகளின் 

 கதையாய்  தெடங்கும்  !!!


No comments: