Thursday, 11 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நீ  நீயாய்  இல்லாப் பொய்யே 

 நீ  தந்த முகவரி 

முகமில்லாத் தருனமே     

 நீ  கொண்ட  அன்பு  !!

இருந்தும்! உன்னை 

அறியாமலேயே  

உன்னைத்தேடுத்து  மனசு !

இதயம்  நீ !

யாரெனெத் தெரியாமலேயே 

குழம்புது  தவிக்குது! 

நீ விட்டுப்பிரியும் 

நிமிடம் 

நீ எனனோடு புன்னகைக்க 

 என்  இதழ்கள்  உன்  பெயரை 

உச்சரித்து தவமிருக்கும்!!  

ஆனாலும்!! 

நீ  யாரோ என்று 

எனனை ஏமாற்றி 

விலகிடத்துடிகவும் செய்யும் 

அதே  நிமிடம் !மீண்டும் 

நான் அனுபவிக்கும் 

தனிமைக்குள்

 நீ தரமறுத்த  நம்பிக்கை 

 வனத்தின் தூரத்துக் கனவாகும் !! 

மீண்டும் விதியென

நாட்கள்  தனாய்  நகரும் 

மீண்டும்  மீண்டும் 

தோற்பது  நான் 

உன்னிடம்  மட்டும்!இருந்தும்  

நானாகவே  நகருகின்றது 

அர்த்தங்கள் அற்ற  இருளோடு வாழ்க்கை !!


 

No comments: