Thursday, 27 July 2023

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

 எனக்கான மண்ணில் என்

முகவரிக்காய்  போராட்டம்

முகவரியிருந்தும் அன்னியபெண்ணாய்

சொந்தமண்ணில்!!நான் 

 சுற்றுலாப்பயணியாய்!

பணத்தை கட்டுக்கட்டாய் கொடுப்பவன்

முகவரிகள் மட்டும் வெளிச்சத்தில்

உரிமையற்ற நிலம் கூட

 உரிமையாகின்றது  சிலநெடியில்!!

வாழமுடியா இடத்தில் 

பலகோடிசொலவில் வீடுகள் !!

அனாதையாய் உயர்ந்தே கிடக்கின்றது!

போகும் பாதையேரம் இறந்தபின்னே

நிழலாய் மாறிய நிழல்கூட மனிதர்கள்!

விழிகளில் ஆச்சரியமானர்கள்

யுத்தம் பறித்த  தமிழ்!

என்னைபோல் அங்கே

முகவரிதேடியழைகின்றது !!

அர்த்தங்கள் புரியாமல் 

தாய்மொழி விற்பனை சந்தையில்

முதல் தரப்பெருமைப் பொருளாய் 

அரசியல் சந்தையில்  நன்றாகவே பேசி

விற்பனை செய்யப்படுகின்றது !

வெளிநாட்டுத்தமிழ்  தன்னைமட்டும்

சிந்தித்து  இருபதையும் கெடுக்கின்றது

நாடு எனது!! 

உரிமை மட்டும்! அங்கே 

இல்லை   

பணம் பேசும் பணமும்  இல்லை  !

சொந்தநாடும்  இல்லை !!



No comments: