நாட்கள் கடகடவென
ஓடிக்கொண்டது
மண் தந்த சின்ன சின்ன்
ஆறுதல்கள்
சிதறடிக்குது திசைமாறிய
நாட்கள் கடந்தே போக
துரத்துதனியாய் துயரம்
மீண்டும் வரவேற்கின்றது
பணம்தேடும் பணக்கார யுத்தம்
இங்கே!! பக்கத்தேயிருந்தும்
தூரமாய் பெய்யும் அன்பு மழை
காணாமல் போகும் உணர்விற்க்குள்
இறந்தே தேடும்
ஆடம்பரபோராட்டம்!
அதிகாலையும் இரவும் ரசனையற்றே
தனியாய் கடக்கும்
எல்லோரும் ஒரு பொய்யில்
அழகாய் தெரிவார்!
மனமட்டும் சலிப்போடு
ஒரே கனவைசுமக்கும்
மீண்டும் வந்திடலாம்
என்ற நம்பிக்கை கனவாய் இருக்கும்!!!
.jpg)
No comments:
Post a Comment