Sunday, 30 April 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓற்றை வீணைக்குள் விழுந்த

உயிர்த்துளி  ஊமையாக்கியது

இசையை 

பெற்ற வலிக்குள் விழுந்த 

கண்ணீர்த்துளி  குருடாக்கியது

கண்னை

இற்றைவரை புரியாமலே

ஊணமாக்கியது காதல்

கற்றவரை துணையாய் வருகின்றது

கவிதை

இக்கதியில்  கூட நடக்குது

கற்பனை 

எக்கதியிலும் என்னை  தாங்குது

தனிமை

அக்கம் பக்கம்  

யாருமில்லாப்பொழுது

உறக்க சொல்லு உறக்கம்

இப்பொழும்  சொல்லாமல்  துடிக்கு 

உயிர் 

எப்பொழு  சொல்லும் என

தெரியாமலே தயங்கியே கிடக்கு மனசு!!!







குட்டிக்குட்டிச் சாரல்


 உண்மைகள் ஊமையாகும்

 போதே

தவறுகள் பேசிக்கொள்கின்றது

உண்மைகள் மௌனமாகும்

 போதே

சிலர்வாழ்க்கை தடமாறுகின்றது

உண்மைகள் புரியாத

 போதே

பொய்கள் உறவாடுகின்றது

உண்மைகள் உறங்கிடும்

 போதே

வாழ்க்கை இருள்லாகின்து!!

Sunday, 16 April 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 புரியமால் பேசும் இதயங்கள்

முன்னே  பேசாதிரு 

புரிந்த இதயமுன்னே

எதையும்பேசு 

எல்லாம் அறிந்தவர் முன்னே 

அமதியாய் இரு 

எதையும் அறியாமல் பேசும் இதயமுன்னே

ஊமையாய் இரு 

தன்னை உயர்த்தியே பேசும். இதயமுன்னே

உன்னை தாழ்தியே வை

உன்னை  தாழ்த்தியே  பேசும் இதயமுன்னே

ஒரு படி  விலகியே நில்லு

உன்னை உயர்வாய் நினைக்கும்

இதயத்தைடன் தோழமையேடு  இரு

உன்னை அன்பாய்  பார்த்திடும்

இதயத்தேடு கைபிடித்தே நட

உன் சுமைகளை சுமந்திடும் இதயத்தின்

உதயமாய்  இரு!!!


Saturday, 15 April 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 நிமிடத்துளிக்குள் முடிந்தது

கனவு  

காலத்துளிகள் சொல்லுது

கொல்லுது  என்னை

ஏமாற்றதை சொல்லிச்சொல்லியறயே

ஆசைதுளிகள் அடிக்குது இலையுது

பின்னே

அலையில்  சிக்கிய இலையாக 

நாளும் கிழமையும்

வருவதும்  போவதும் தெரியமலே

உறங்கிக்கிடக்கு தனியாக!!!

Friday, 14 April 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வெட்டிய கதிர்வீடு சோர

குற்றிய நெல்லால் பானை நிறைய

வற்றிய வயிர்கள் மகிழ்வாய் புன்னகைக்க

இல்லையென்பதை இல்லாமல்

செய்ய  இருப்பவர்

கொடுக்க கையேடு விசேசம்

வாங்கியவர் இல்லமும்

குதுகலம் கொண்டே  புதிதாய்

பிறந்திட பழமையின்

உன்னதம்  பருவங்களை கொண்டியது

அறியாமை மனிதனின் அழகியலை

அழித்தால்

கொடுப்பவர் கைகளும்

கொடையை மறக்க  இருப்பதே

வறுமையென இல்லாதவர் ஏங்க

இருப்பர்களுக்கே  பண்டிகைகளானது!!!


Wednesday, 12 April 2023

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


வாழ்க்கையே   இல்லையென

இறைவன் சொன்ன 

விதி

இருந்த தைரியம் தொலைத்தே 

என்னை கோழையாக்கிய

விதி

போதுமென துன்பம்  கொடுத்தே

இன்பதை அதிஸ்ரமாய் தொலைத்த

விதி

 சொற்கள் குத்தியே இதயம்

பட்டு காயம் கண்ட

விதி

மரணத்தை தந்து மனதை

வென்றிட  இறைவன் எழுதிய

வீதி

இறந்த காலத்தின் ஆசையை

நான் இறந்தகாலத்தில் தேடிடும்

விதி

நிகழ்காலமாய் தூரத்தியே வருகின்றது

என் இருண்ட முகம் பார்த்தே

விதி!!



Monday, 10 April 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்றெரு நாள் 

விதி

இற்றைய நாளில்

 வெள்ளையாடைதனை

பரிசாய் தந்த போது 

மகிழ்வாய் பெற்றேன்

எதனையும் 

புரிந்துகொள்ளாமலே!!விதி

 உணர்த்திய எச்சரிக்கையின்

அர்த்தங்கள்  யாவையும்

இப்போது   நம்பு மனசு!!


குட்டிக்குட்டிச் சாரல்

 பயணங்களில்



பல முகங்கள்

தவறுகளை கற்று தந்தது

என்னை சிந்தித்து  

திருத்திக்கொள்ள!!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 மரணம் ஈன்ரெடுத்த

மைத்தனின்  நாளில்

மரணம் ஈன்ரெடுத்த ஒற்றை

பூவிது!!!

 கற்கள் வழிபாதையின்

சிலுவையாய் பவத்தை சிந்தாமல்

சிதறமல் சுமக்குது 

செய்த பாவம் புரியாமல்!!

விதியென பாவத்தை சுமந்தபடி

தள்ளாடியே தனிமையேடு

திண்டாடு தினமும் !!!

கண்டாடும் விழிகள் கதையாக

விழுத்தாடும் நெடிகள் சுமையான

பூவிற்க்கு  !!

கையேடு இறை கொடுத்த விதி 

கருவேடு இருள் 

விடியதேயென தேடியே 

வினானது  காலங்கள்!!

 அழித்திட முடியாமலேயே

 பூவும்  நடிக்குது இயல்பாய்

கண்ணீரை மறைக்கு  சிரிக்குது 

ரசிப்பவர் பாவம்மென்று!!!

பெய்களை நம்பியே வாழ்பவர்

வாழ்க்கைக்குள்  ஒரு கற்பனை

பெய்யாய் உண்மையின் விதியில்

இற்றைவரை அர்த்தங்கள்

புரியாமலே மற்றவர் எழுதிய

தண்டனைகளையும் சுமக்கு

விதியென்று!!!


Sunday, 9 April 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 காதல் !! 

இதயத்துடிப்பிற்குள் 

கைபிடித்து  தனித்தனியாக 

நடக்கின்றது

இருவர்வாழும்

வாழ்க்கையின்  இருவர் 

நினைவேடு !!!


Saturday, 8 April 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 பெற்றோர்கள் சரியாய்

இருந்தால் பிள்ளைங்க தவறாய்

இருக்கின்றார்கள் 

பிள்ளைங்க சரியாய்

இருந்தால்  பெற்றோர்கள்

தவராய் இருக்கின்றார்கள்

பெற்றோரும் பிள்ளைகளும்

சரியாய் இருந்தால் கூட

சோர்கின்றவர்கள் தவராய்

இருக்கின்றார்கள் ! ஒரு சரியும்

ஒரு தவரும்  இணைந்ததே வாழ்க்கை

சக்கரம்!

குட்டிக்குட்டிச் சாரல்

 நிலையற்ற 

விந்தை உலகின்

விசித்திர மனிதர்களின்

வேடங்களை கண்ட  

பின்னே

அவள் வனத்திற்க்குள் 

ஒரு  ஒற்றை  குயிலானால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 உண்மையை யார் கூறியும்

கேட்கா மனிதன்  அனுபவித்து

தோற்ற பின்பே 

அன்பை  பிச்சையீய்

கேட்கின்றான்  !!!



குட்டிக்குட்டிச் சாரல்

 வாழ்க்கை 


தோற்றபோது

உறுதியாய் எழுந்தே 

நடந்தவள்

காதல் தோற்றபோது  

உடைது சிதறி விழுந்து 

விட்டாள்!!!

Friday, 7 April 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 வர்ணங்கள் கொண்டு 

வரைந்தவள்  ஒவியத்தை 

ரசித்தவர் பார்க்காதே

போன அவள் விரும்பிய

வர்ணம் அவள் கைகளில்

ஒட்டிக்கொண்டது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 ஓரு சிந்தனை சிதறிலின்

தொலைந்து போன முகம்

இவள் முகம் 

ஒரு கனவின் சிதறலில்  

கரைந்து போன முகம்

இவள் முகம் 

ஒரு கவிதையின்  கற்பனைக்குள்  

தொலைந்து போனது

இவள் முகம்!!!


Thursday, 6 April 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 மனதேடு போராடி 

மனதினைவென்றெழுந்திட

சிலகாலம்

கனவேடு போராடி 

கனவுனை தொலைத்தெழுந்திட

சிலகாலம்

கற்பனையேடு  வலிகளை சுமந்து

மாற்றத்தை தேடியே நின்றது

சிலகாலம்

எதிர்பார்ம்போடு  ஏமாற்றங்களை

சுமந்து நல்ல காலத்தின் காத்திருப்பில்

சிலகாலம்

காலம் கடந்தே கடந்த வயதை

திரும்பிபார்த்த 

கண்ணீர்  சொன்னது

உன் வாழ்க்கை  அர்த்தங்கள்

புரியாமலே முடிந்து போன ஒரு

ஓற்றை சொல் கவியென்று!!!

Wednesday, 5 April 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 வாழ்க்கை 

கசந்த பின்னர்

நம்மையே நாம் 



வெறுத்த பின்னர்

எந்த மரணமும் 

நம்மை பாதிப்பதில்லை 

 நாளை நாம்

என நினைக்கும் மனசு

 நமக்குள்ளும் 

வந்துவிடுவதாதல் !!!

Monday, 3 April 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 சித்திரைப்பெண்னிவள்

சிற்றிடை சுற்றிய பட்டுடை

பட்டெளியில் நித்திரை போனது

மாமனுக்கு 

 சிந்தைக்குள்  வந்தவள் 

முகம் சிந்திய புன்னகையில்

நிலவெளி வெறுத்தது 

மாமனுக்கு

வெட்டிய நெற்கதிர் குத்தியே

சமைத்த சோற்றிக்குள் கைகள்

கோலபோட்டிட அத்தையவள்

உருட்டியவிழிகளுக்குள் 

உருண்டெழுந்து மாமன்  

உண்டதென்னவே அவள்

நினைப்பதைத்தான் !!!