Friday 29 June 2007

தேடலால் வந்தசாரல்.....,

ஆணிடமிருந்து பெண்ணிற்கும்
விடுதலை !பெண்ணிடமிருத்த
ஆணிற்கும் விடுதலை

காதலில் இருந்து கற்பிற்கும்
விடுதலை!கற்பிற்குள்ளிருந்த
காதலுக்கும் விடுதலை

பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கும்
விடுதலை!பிள்ளையிடமிருந்த
பெற்றோருக்கும் விடுதலை

உறவில் இருக்கும் பாசத்திற்கும்
விடுதலை!பாசத்திற்குள்ளிருந்த
உறவிற்கும் விடுதலை

பணத்திலிருக்கும் சொந்ததிற்கும்
விடுதலை!சொந்ததிற்குள்ளிருந்த
பணத்திற்கும் விடுதலை

நட்பிலிருந்து தூய்மைக்கும்
விடுதலை! தூய்மைக்குள்ளிருந்த
நட்பிற்கும் விடுதலை

இறுதியில்
பூமியிடமிருந்து மனிதனுக்கு
விடுதலை!மனிதனிடமிருந்த
பூமிக்கும் விடுதலை!!!

2 comments:

ஜீவி said...

அன்னியமாதல் ஆபத்தானது
அது விட்டுசெல்லும் வெறுமை
உலகம் பிறந்தது எனக்காகவென்றால்
உற்சாகம் பிறக்கும் உணர்வீரே!

சு.கஜந்தி said...

நன்றிகள் உணர்த்திய வரிகளுக்கு
ஆதரவு தந்த என் உறவிற்கு மேலும்
நன்றிகள்