Wednesday, 27 June 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எனக்கும் அவனுக்கும்!
வாழ்கையென்னும் விடுதலையில்லா
சிறைச்சாலைக்குள் புரிந்து கொள்ளா
முரண்பாடு..

விரக்தியான நாட்களை
கண்ணீர் சிந்தும் கோலம்
முகமூடியால் மறைத்துக் கொண்ட
முரண்பாடு

போலியான வாழ்விற்குள்
மலர்ந்த சின்ன மலர்கள்
உறவைத் தேடி சிக்கி தவித்து
பாசம் தேடும் முரண்பாடு

யாரோடும் சொல்லச் சோகங்கள்
எம் முரண்பாட்டால் முரண்பட
விரிசல்கள் விடை காண
நாளைய முதியோர் இல்லத்தை
எம்  முரண்பாட்டால்
  உருவாக்கினோம்   !!!

2 comments:

Jeyapalan said...

//சிக்கித் தவிக்கின்றது//
சிக்கித் தவிக்கின்றன?

சோகம் தான் கவிதைக்கு வேரா?

சு.கஜந்தி said...

நன்றிகள் என் உறவிற்கு
அப்படியில்லை இங்கே எல்லோருடைய
ரசனையும் வரும். ஆனால் சிறிய இடைவெளி வேண்டும் அதனை
செய்வதற்கு எல்லோரும் ரசிக்க
வேண்டும் என்பதுதான் என் ஆசை
உங்கள் ஆரவு இருந்தால் மாற்றங்கள்
கட்டாயம் வரும்