Tuesday, 7 January 2014

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

வியாபரமாக்கிய வாழ்கைக்குள்
 விற்பனை சரக்காகிய மனிதன்
பணமின்றிய  நேசத்தை கொள்வனவு
செய்திட முடியாமல் 
இப்போ!! 
பொய்யா கனவிற்குள்
 விழுந்தெழுந்து
மெய்யான வாழ்வினை 
தொடத்துடிக்கும் 
வேட்டிக்கும் சோலைக்கும் இதனால்
சண்டையப்பா !!!
பொய் சொல்லி தேடிய உறவை
கொஞ்சம் மெய்யாய் உழைத்து
காத்தால் தான் என்ன!!!!

Monday, 6 January 2014

லொள்ளுக்கவிதைகள்,

கற்பின் வட்டதிற்குள்
பெண்மையை மட்டும்
அடைத்திட்டதால் !!


அடைபடாத சிங்கம் புலிகள்
மானை ஆடவிட்டு வேட்டை
ஆடுவதால் !!
மனிதவட்டதிற்குள்
ஐயோ!! பாவமானதே மான்கள்!!

லொள்ளுக்கவிதை







சொர்கம் பெண்மையென்று
ஆண்மை தேடியதால்
இலவச இணைப்பு
உச்சவிலையானது
இதில் வாங்குபவன் தவற
கொடுப்பவன் தவற
இருவர் தவறும் புதுபாதை
தேடுது தன்னைக்காத்திட!!