அவள் விழும் போதும்
அவளுக்காய் துடிக்க
ஒர் துடிப்பில்லை.!அவள் அழும்
போதும் அவளுக்காய் துடிக்க
ஓர் துடிப்பில்லை!
அவளுக்காய் துடிக்க
ஒரு துடிப்பு இருக்க
அவள் எப்படி நடிக்கவேணும்!
அவள் தேடித்தேடிப்பார்க்கிறாள்
அவளுக்கு. இன்னும் புரியவில்லை
அவளின் பெண்ணான பிறப்பை!!
பெண்மகளாய். அழகாய்
புன்னைக்கின்றாள் !
மனைவியாய் தினம் தினம்
வாழப்போரடுகின்றாள்!
காதலியாய் கற்பனைக்குள் புரியாமல்
வேடிக்கைக்கு வாடிக்கையாகின்றாள் !
விபச்சாரியாய் உணர்விற்கு
சொந்தமாய் உயிர்கொடுக்கின்றாள்!
வைப்பட்டியாய் சில நேரத்தேவைக்கு
உரிமையின் உறவாகின்றாள் !
கள்ளக்காதலியாய் ஊர் நாற
கற்பனைக்கு தலைவியாகின்றாள்!
இருந்தும் ஆண் சொல்லும்
எல்லா அவமானத்திற்கும்
தலைவிதி வரலாறு காண்கின்றாள் !!
.jpg)
No comments:
Post a Comment