பஞ்சமா பாதகம் செய்தார்
தலைகொய்திட்ட
நீதிகள் பிறந்த மண்ணில்
அஞ்சாமல் பஞ்சமாபாதகம்
செய்திட்டு பணமுட்டைக்குள்
ஒழித்து விளையாடும்
காலிகாலத் தாண்டவம் இது !!
முடியாமல் தடுமாறும் நீதியின்
கைகளை வாளாக மாற்றி
சிங்கப்பெண்னே நீயே !!
மானினம் வேட்டையாடும்
ஓநாயகளை விட்டு விட்டாமல்
வேட்டையாடு !
நம் குலம் காக்க
மண்ணில் ஒரு கிருஷ்ணர்
சேலைகொடுக்க இல்லாமல்
போனாலும் !!
தன் பெண் சேலையை
தொட்டவனை எட்டிப் பிடித்து
கட்டிப்போட ஒரு தமையனும்
இல்லையென்றாலும்!!
உன் கைவைத்தே
உன் கண்ணை குத்தியே
அழித்தலும் !
சிங்கப்பெண்ணே
சேலைத்தோடும் கயவன் கைகளை
நீ விட்டுவிடலாமா !!வெட்டிவிட்டு பேசும்
ஒரு கலியுக சிங்கபெண்ணாகிய
களம்விளையாடு!
விட்டுவிட்டதால் தான்
நீதியின் முன் ஆராச்சி மணி
துருபிடித்துகிடக்கின்றது
துருப்பிடித்த மணியொலிக்க
சிங்கப்பெண்ணே எழுந்து
விளையாடு !!
இது தர்மம் குறையும் பூமி
உன் இனம் காத்திட நீயே வா
துணையாக!!!
No comments:
Post a Comment