மனசில் நின்றாடுது
பல கேள்விகள்
பதில் இல்லாமல்
இறைவா !
உன்னோடு பகையாகி
என்னோடு வெறுப்பாகி
என்னையே கேள்வியாக்கி
விடையின்றி தவிக்குது
இறைவா !!
என் விதியின்
பொருள் என்ன
இன்னும்
உயிர் கொடுத்து
உயிர் வாழ
இவள்
வாழும் வாழ்க்கையின்
அர்தமென்ன
கனவோடு கரைகின்ற
கனவுக்குள்
விழுகின்ற துளிகள்
சொல்லும் உணர்வுக்குள்
புரியாமல் புகுந்துகொண்ட
கேள்வியாய்
நீ
பார்ப்பதென்ன
பொய்யாக அழுதலே
மெய்யாக துடித்திடு
உறவுகளை மரணிக்க
வைத்திட்டு
மெய்யாக அழுதாலும்
பொய்யென சொல்லும்
உறவுகளோடு வாழந்திடும்
வேடிக்கை வாழ்வை
வேண்டாமல் வாழ்ந்திட
சொல்வதேன்
இறைவா !!
கொண்ட உயிரில்
பாதிக்கலாம் முடித்தபின்னு
மிதிக்காலத்தை கொண்டுதான்
போவேன் இறைவா !!!
No comments:
Post a Comment