Wednesday 10 June 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

காட்டோடு நால்வர் பயணத்தில்!
தாகமும் பசியும்  களையோடு சோர்வும்
தேடலின் வலியும் தொடர்ந்த
பாதையின் ஓரமாய் !!
கண்ணேடு ஒர் குடிசை
 வறுமையின் தொட்ல்லிட்டு
தென்றலுக்கும் மழைக்கும் பயந்து
அஞ்சிஅஞ்சி நெருப்பிட்டு
அப்பப் பொங்கி உண்டு
தண்ணிரில் கண்ணீரில் மிதக்கின்ற வீடாய்
இருண்ட கண்னுக்குதெரியக்கண்டு!!

நால்வரும் தடுமாறி வாசல் போய்
நிற்க்ககண்ட பெண்ணவள் புன்னகைக்க நகையற்ற
புன்னகையென்றை புன்னகைத்து
கொடுத்திட உணவில்ல பாத்திரம்
தொடைத்து கால்வயிறு தண்ணீரோடு
கால்வயிறு உண்ணக் கொடுத்தவள் முன்னே!

பசிக்கு பகிர்ந்திட நற்குணம்
நால்வருக்கும்  நன்மைசெய்ய
தன்பசியெண்ணம் அடித்துக்கொண்டு
இலுத்துதிர்த்தனர்!முற்றத்தில் உணவை!!
பசியிடோடு  வயிறுதவமிருக்க கொட்டினர் தன் உயிர் சிறக்க!!!

புன்னகையாய்  நின்றவள் கண்ணுக்கு
சிற்றெறும் கூட்டமென்று சிதறி ஓடிவந்து
ஒற்றுமை வரிசையில் உணவோடு போவது
கண்ணின் காட்சியாய் தெரிய சொல்லொன்று கூறாது சிற்பமாய் நின்றால்!!!கட்டெருபின் அழகைரசித்தபடி!!!!



No comments: