Wednesday, 22 October 2014

தீயாத்தீபத்திருநாள்

மனதிற்குள் ஆயிரம்
அழுக்கும் குப்பையும்
அழியாது இருப்பதை
அழிந்திட வந்திடும்  ஒளியே!!

அடுத்தவர்சொல்லும் செயலும்
 புரியாதுஇருப்பதை ஒர்நாளேனும்
புரிந்திட வைத்திட அழியாது
வந்திடும் ஒளியே!!

 இருப்பதைத் தொலைத்து
எடுப்பதை எண்ணி இருப்பதை
விட்டு அழுதிடும் இதயங்களை
சிரிந்திட வைத்திட வந்திடும் ஒளியே!

ஆன்மீகஅறிவை அறியாது
தொழிநுட்பறிவாள் தடுமாறி
தடையானவரை தடுத்திட
தடைபடாது தொடரும்ஒளியே!!

இல்லதின் ஒளியாய் உள்ளத்தின்
வழியாய் உறங்கிட்ட பாசத்தை
உயிரோடு எழுப்பிட  எழுந்திடும்
ஒளியாய்யெழுந்திட்ட ஒளியே!!

இறந்துகொண்டே வாழும்
மனிதநேயத்தை உள்ளத்தில்
எடுத்து!!பணயிந்திரமனிதனை
இல்லத்திலாவது கொட்டாடிட
கொண்டாடிடும் தீபஒளியோ!

எதிர்பவர் இயத்திலும்ஒளிர்த்திடு
நல்லெளியாய்!!



No comments: