Sunday, 5 May 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்னில் இதயம்
உன்னில் துடிப்பு
என்னில் வேதனை
உன்னில் கனவு
என்னில் வறுமை
உன்னில் கற்பனை
நாமிருவர் ஒருவராவது
எப்படி!!
என்றாள் மனைவி
நன்றாய் கேளடி
 என் பெண்ணே!!
உன்னில் என்  தேடலாய் 
எனக்குள் தொலைந்த 
அன்னையின் பாசம் 
உனக்குள்  பேச !
எனக்காய் தந்து 
என்னை மகிழ்வித்து
எனக்காய் வாழ்ந்தவள்
 தத்தெல்லாம்
என் உணர்வின்  
மகிழ்ச்சிகளாய் 
உனக்குள்  துடிக்க !!
என் உணர்வோ 
உன்    உணர்வு
ஆனதால் !
உனக்கு வேண்டாம்
தனியுணர்வு 
உன்னை அழித்து 
எனக்காய் வாழவோ
உன்னை நேசித்தேன் 
என்றான்!!
சிதறிய துளிகள் 
மௌனமாய் சொன்னது
இன்னும் புரியவில்லை
ஒருவன் தரும்  வாழ்க்கை !!


No comments: