Wednesday, 15 May 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

Bildergebnis für ரோஜா
கல்லறை மலர் நேசம்

வையகம் அறியாத்தெருவாசம்

பொய்யாய்  போனகாதல் நேசம்
ஐயகோ!!! பாவம பூவின் வாசம்

அடுத்தவர் அறியா வலியின் நேசம்
அறிந்தவருக்கு தெரியா பூவின் வாசம்

எடுத்தவன் கொடுத்த பூவின்  நேசம்
ஏழைக்கு கிடைத்த சிறையின் வாசம்

உரிமைக்கும் புரியா உறவின் நேசம்
இறைவனுக்கு கொடுத்த கல்லின் வாசம்

கேட்டும் கிடைக்க உறவின் நேசம்
உலகிற்கு சொல்லா உரிமை வாசம்


இழந்தும் கிடைத்த ஊமை நேசம்
வலிக்கும் போதே கிடைத்த வலியின் வாசம்

கனவுகள் கலைந்த கண்ணீர்  நேசம்
இதய நரம்பை அறுக்கும்  வாசம்


உணர்ச்சிபிடிக்கியெறிந்த உயிரின் நேசம்
ஆசைகளை அழித்த உறவின் வாசம்

எரிந்த சாபலில் உயிர்த்தபூவின் நேசம்
மீண்டும் எரிந்து மண்ணில் புதையும் வாசம்

இறந்து உறங்கும்  உயிரின் வாசம்
எமனுக்கு தொடுத்தமாலையின்  நேசம்

மொய்யறியா  பொய்யான முகங்களின் வாசம்.
எனியும் ஏழுந்திடா உயிரின் நேசம்..............................

No comments: