எட்டி எட்டி பார்க்கின்றேன்
எங்கோ தொலைந்த
கனவினை கொஞ்சம்
அள்ளிக்கொண்டு நடைபோட!!
ஆனாலும்!
கொஞ்சமும் அச்சமின்றி
நட்டநடுவான்
நட்சத்திரஒளிபோல்
விட்டுவிலகிய கனவுகள்
அப்படியே நிக்கின்றது
என்னைத் தள்ளிவிட்டு!!
அழித்தொழிந்த கனவுகளை
கொஞ்ச நாள் நான் வாழ!!
எங்கிருந்தோ வந்து போகும்
தொன்றல்கற்று
சுழன்று போகையில்
அத்தனையையும் சிதறவிட்டு
வெற்றுக்கைகளாய்
வெற்றுக்கைகளாய்
மீண்டும் திரும்பிட
செய்கின்றது என்னிடத்தே!!“
குட்டிஇதயமதில் கொட்டி வைத்த
கனவுகளை
தட்டித் தட்டிப்பார்க்கின்றேன்
கொஞ்ச உற்சாகத்தை
கட்டிக்கொள்ள
கட்டிக்காக்கும் சிந்தனை
தடடிவிட்டுபோகின்றது
அத்தனையும் மறந்திட்டதாய்!!
எத்தனையோ கற்றாலும்
எத்தனையோ நினைத்தாலும்
அத்தனையும் கூடிடா
பலமிழந்த மனசு ஏனோ
என்னை சுற்றி சுற்றி வந்து
இதயமதை உடைக்கின்றது
என்னை சுற்றி சுற்றி வந்து
இதயமதை உடைக்கின்றது
கனவிற்காய்!!!!!!!!!!
.jpg)
No comments:
Post a Comment