இதுவரை என் கண்கள்
தூக்கி சுமந்த நீரெல்லாம்
இப்போதே!
தப்பியோடிட துடிக்கின்றது
எத்தனை நம்பிக்கை என்
கண்களுக்கு மட்டும் !!
இதுவரை என் கண்கள்
தூக்கி சுமந்த நீரெல்லாம்
இப்போதே!
தப்பியோடிட துடிக்கின்றது
எத்தனை நம்பிக்கை என்
கண்களுக்கு மட்டும் !!
ஒவ்வென்றாய்!
இழந்த பின்னர்
ஒவ்வென்றும் கற்றுத்தரும்
பாடங்கள் என்னை மட்டும்
மனிதனுக்கு வழிவிட்டு
தனியே நடந்து போகச்சொல்லுகின்றது!!
பத்திரிகைச்சுகந்திரம்
படுத்துக்கிடக்கின்றது
பணக்காரன் வீட்டுக்குள் !!
ஏழையின் கண்ணீர்
விழுந்தோடு கூவத்துக்குள் !
இல்லறம் அறம் தேடுது
நல்லறம் இழந்து
திமிர் எழுந்து
விளையாடுது பாசம் கொன்று
பணம் வந்து கூட்டு சேர்க்கின்றது
தனிமனிததுணைக்காய் !!
என்னைப்படைக்கும்
போது
என்ன நினைத்தானோ
இருக்கும் வரை
அழுது கொண்டே ஓடு
எங்கின்றான்
முட்டிமோதி பார்த்தாலும்
முடியாதே போகின்றது
தூரம்
விழுந்தெழுந்து களைத்து
நிறுவிடடேன்
எனியாவது
ஓய்வுகொள்ளட்டும் இறைவன் !
தமிழில்
விடுதலை என்னும் சொல்
மட்டும் பெண்
தொலைத்து விட்டு
தேடுக்கின்றாளே !
ஒற்றை ஆணை
கோடிப்பெண்கள் கொண்டாடும்
உலகத்திற்குள் ஒரு பெண்குழந்தையை
கூட பாதுகாத்திட யாருமில்லை
வேடிக்கையான விடுதலை தேசம்
பெண்ணிற்கு மட்டும்!
தூயதமிலில் பெண்ணை துரத்தி
துரத்தி இழிவு படுத்தும்
மனித நேசம்
கள்ளத்தொடர்வுக்குள்
விளக்கைபோட பணத்தை எரித்தலும்
இழந்த வீட்டிற்க்குள்
வறுமை போக்க எந்த
பணத்தையும் எடுப்பதில்லை ஏனோ
பேதைப்பெண்ணாய் போதை
தேடும் மனிதநேயத்தை மாற்றும்
உறவில் புதிய விடுதலை பூக்கட்டும் !!!
விதியோடி விழுத்தியகாலம்
விடுதலையில்லா
மரணதண்டையென
விட்டுக்கொடுத்து போன
உறவு எழுதிய சுயநலப்புத்தகத்தின்
வரிகளை படிக்காதே அவள்
புரிந்து கொண்டால்!
நாம் யாரோவாய்
வாழவேண்டும் என !!யார் யாரோ நம்மைக்கேட்க்காமலேயே
நம் ஓவியத்தை அளித்தளித்து
வரைந்து பார்க்கின்றனர்
தமக்கு பிடித்தமாதிரி !
வருடங்கள் ஓடுகின்றது
வாழ்க்கையும் ஓடுகின்றது
கூடவே இல்லறத்திற்குள்
மட்டும்
புரியாமல் இரு உடல்கள்
சேர்ந்தோடுகின்றது !!
விழுந்தெழுந்து விழாமல்
வாழமுயற்சி செய்யும்
மனிதன் !
காமக்குளத்திற்குள் ஒழுக்கமில்லா
கல்லாய் !விழுந்து
மூழ்கிகிடக்கின்றதால்தானோ
நட்பின்கைகள் கறைபடித்து
கிடக்கின்றது !பெண்மைக்கு
பொருள் சொன்ன பொருள்ளெல்லாம்
தாசிக்குள் அடைக்கப்பட்டு
மூழ்கிப்போனதோ!பெண்ணின்
ஒற்றை வடிவம் ஓராயிரம்
வார்தைகளால் தாக்கப்பட்டு
அளிக்கப்படுகின்றது !இங்கே
பேச்சு சுகந்திரம் இழிநிலை
வார்த்தைகளுக்குள் பாண்டவர்
மனைவியின் வாரமோ !!
ஒரு மாலைப்பொழுது
மழைதுளிக்கு ஏங்க
ஒரு தூறலின் துளி
பூவினித்தழுக்கு ஏங்க
ஒரு வண்டின் தேடல்
தேன்துளிக்கு ஏங்கிக்கிடக்கின்றது
இதயத்தை
அழகாய் நேசிக்க
ஆழமாய் யாரும்
தீண்டிப்பார்த்ததில்லை !!!
உடைந்த அவள் இதயத்தின்
கண்ணீர்துளிகள்
யார்மனதையும்
தொட்டதுமில்லை இதுவரை
அவள் தேடிய கோவிலில்
கடவுளும் உயிரற்றுபோன
உருவமே !!!இருந்தும்
அவள் தேடப்படும் புத்தகத்தின்
கடைசிப்பக்கம் !!!
விளையாடி ஓய்ந்தது கனவு
விளையாட்டாய் முடிந்தது வாழ்க்கை
விதியென தேற்றுது மனசு
விழுத்திவிட்டு அழுகின்றது கண்கள்!!
சோர்வாய் ஒரு பார்வை
அழகினைக் கண்டுகொள்ள
ஒரு இதயத்துடிப்பு
யாருக்கும் இல்லா ஒரு
சோகம் ஆறுதலில்லா
அருகாமை அவளோடுமட்டும்
நிரந்தரம் !!!
காலத்தின் கண்ணீருக்குள்
விதைக்கப்படட தனிமை
கோடிப்பெயருக்குளும்
கண்டுகொள்ள பென்குயின் வரலாறு !!
எதை இவ்வுலம்
தேடுகின்றது
எதற்க்காக இவ்வுலகம்
போராடுகின்றது இதுவரை
புரியாமனிதம்
எது எதுவென தேடினாலும்
இதுவென சொல்லும் மனிதன்
சொல்லுக்குள் அடங்கிவிடுகின்றது!!!
நெஞ்சம் வலிக்கின்றது
அவளுக்கு
கொஞ்சம் உறக்கம்
கடன்கேக்கின்றது அவளை
இல்லையென்றே போகின்றது
நாட்கள்! அவள் கேளாமல்
துடைக்கின்றது துன்பம்!
அவள் கேட்டும் கிடைக்காமல்
கொலைசெய்யப்பட்ட்து
அவள் ஆசைகள் இருந்தும்
அவள் பெண்ணானால் !!
அவள் !
மெல்ல மனசை எழுப்பிட
முயல்கின்றாள்
அவள் மனசோ இறந்திட்ட
உடல்போல் கிடக்கின்றது
எதையும் நம்பமறந்து !!பொய்களை
கேட்டுக்கேட்டு இருப்பதும்
பொய்யானது அவள் மனசுக்கு மட்டும் !!!