Monday, 22 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 யாருக்கு  புரிந்தது

 அவளை 


யாருக்கு  தெரியும் 

அவளை 

யாருக்கும்   அறியா

 அவள் கனவு 

யாரோ  சொல்ல  

யாரோ கேட்டு 

யாரோ  பேசும்  

 அவள்  இழந்ததை 

யார்  கொடுப்பர்  அவளுக்கு !!

யாரோவாக

யாரும்  இல்லாமல் 

அவளாக  சிந்தித்தேனும் 

பேசுங்களேன் அவளை !!

அவள் என்பதால்  தானே 

இத்தனை  விமர்சனங்கள் 

அவளாகயில்லையென்றால் 

எல்லாமே  சரியானதாய்  முடிந்திருக்கும் !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 அருகே  இருப்பதாய் 

தூரமாய்  அவளுக்கும் 

புரியாப்பாசம் !

தூரமாய்  இருந்து 

அருகே  இருப்பதாய் 

தூரமாய்  பாசமாய் 

அவளைப்புரியாமல்

  நிழல்களாய்  உறவுகள்

ஆனால்! அவள்  மட்டும் 

எப்பவும் தனியாய்  அவளோடு !!!  



Friday, 19 September 2025

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 தருவாய்யென  காத்திருந்த 

தருணங்கள்  போனது 

தானாய் !

தருவியா  என  கேட்டு 

தராமல்  பதில்  இல்லாமல் 

தடுமாறும்  தருணங்களை 

புரியாமல்  விளையாடும் 

விளையாட்டும்   பிடிக்காமல் 

களைத்தேவிட்டமனசு வெறுக்கு 

தானாய் தன்னை! அறியாமல் 

புரியாமல்  கூட  தோன்றும் 

தோற்றங்களே தோற்கடித்திடுது 

தவறாய் !!விலகியே  விதியோடு 

நின்றாலும்  விளையாட்டு 

மட்டும்  பூனையிடம்  மாட்டிய 

எலியாய்  தவிக்கின்றது ஏனோ !!! 


Tuesday, 16 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனக்கு  மட்டுமே  தெரியும் 



என  நினைப்பவன் 

தனக்கான  உயர்வை   

யாருக்காகவும் 

விட்டுக்கொடுத்திடா 

பாதையை  மூடும்  காதவாகின்றான் 

 தன்னைவிட 

மற்றவருக்கும்  தெரியும் 

என நினைப்பவன்  பாதையின் 

கதவை  திறக்கும்  சாவியாகின்றான் 

குறைபேசியே  பழகிவிட்ட  

நமக்கு  நிறைவுகாப்பது 

கடினம்  தானே !!

Thursday, 11 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 யாருமே  இல்லையென்ற 

மனசு  எனக்குள்  எழும்  வரை 

எத்தனை  எதிர்பார்ப்புக்கள் 

ஏமாற்றத்தை  அள்ளிகொடுத்தது 

எனக்கும் !!

எல்லாம்  கற்பனையின் 

நிழலென  புரிந்த  பின்னர் 

நான் யாருடைய  மாயா 

உலகத்தின்  கண்ணாடியிலும்  

தோன்றிடவில்லை !!!

Wednesday, 10 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இதுவரை  யாரேனும் 


ஒரு  பெண்ணின் வலியை 

புரிந்து  நேசித்திட 

பிறந்திருப்பதாய் 

காணோம்  பிறவியில்  

செய்த  தவமே  பெண்னென  

 யார்யாரோ  கூறினாலும்  

வாழ்க்கையென்னவோ 

வலியோடு  ஓடும்

  கடல்  அலைகளே !

வரலாற்று  பெருமைகளும் 

சிறுமையின்  உச்சம்  தானே !!

பெருமைக்குள்ளும்  யார்யாரோ 

தோற்கடித்த காயங்களே !

நிலுக்கும்  தெரியாமல்  பெண்னோடு 

புன்னகைக்கின்றது  உள்ளே 

அழுதுகொண்டு !வெற்றியின் 

படிகளில்  நின்றாலும் 

ஏறிடும்  படிகளெல்லாம் 

முற்காடுகள்  தான்  !


Monday, 8 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தனிமையில்  வாழும் 

உயிரைத்  தேடி  

பொய்யின் வானவில்குடையெடுத்தது 

வாழத்தேடாதே  அப்படியே 

விட்டுவிடு  உன் சிலநொடி 

பொய்களே  உயிரில் 

பெரிய வலிகள்!

வலிகளை  புரியாமல் 

தனிமைக்குள்   போராடும் 

உயிருக்கு   பொய்யின்  

ஏமாற்றத் தனிமை 

கொடுமையிலும்  கொடுமை!!!

புரிந்தால்  நன்மை  செய்யுங்கள் 

புரியவிடடால்   விலகியே 

நின்றுவழிவிடுங்கள் !!

 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இல்லையென்ற  ஒற்றைச்சொல் 


 சொல்லாமல்  நில்லாமல் 

கூடவே  நடக்கின்ற  நடைக்குள் 

போராடி  விழும்  உடலை 

தூக்கி  சுமக்க! கடவுளுக்கு கூட 

விதியில்  வழியில்லையாம் !!  

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உலகில்  பெரியமுட் டாளா  

பெண்   இல்லை !!

பெரிய  ஏமாற்றுக்காரன 

ஆண் இல்லை !

காலம்  கற்றுக்கொடுக்கா 

கற்பனையின்  ஏமாற்றமா 

பெண்ணிற்கு வாழ்க்கை 

 இல்லை !அன்பிற்கு  கிடைக்கும் 

சாபமா!!ஒவ்வெறு பெண்மையும் 

சுமக்கும்  கருவிற்கு 

அடையாளப்போராட்டம் 

ஏன் !!இல்லை  காதலுக்குள் 

காமம்  கற்றுக்கொடும்  

பாடம்  தான் புரிவில்லையா  

பெண்மைக்கு !இல்லை 

கைப்பிடிக்கும்  கையின் பிடி 

இன்னோர்  கைக்குள்  இருந்தும்

தன்னம்பிக்கை  பெண்மையும் 

தடுமாறிய  வழிமாறி 

யுத்தம்  செய்யும் தலையெழுத்தேன்!! 

தேடிகிடைக்கும்  தேட  அன்பிற்கு 

விலையே  சண்டையிட்டு 

தன்னை  தொலைக்கும்  சாதனையே 

வரலாற்று  பக்கத்தின்  வாசிக்கப்படாத 

பக்கங்களா  பெண்மைக்கு 

கிடைக்கும்  ஏமாற்றம் காலகாலமாய்   

பெண்மையையே  பழிவாங்கிடுது !!



Friday, 5 September 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 என்  கனவில்  கூட

எனக்காக சந்தோஷம் 

தோற்றே  விழுகின்றது

நியத்தில்  எப்படி  எனக்கானதாகும் !!!

இருந்தும்  இருப்பதாய் 

சொல்லிக்கொள்ளென 

சொல்கின்றது   வாழ்க்கை 

விட்டுவிடாமல்  துரத்துகின்றது 

காரணங்கள்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இழப்பதற்கு ஒன்றுமில்லையெனும் 


நிலைக்கு  வந்தபின்னரே 

கண்ணாடி நமக்காணதில்லையென 

வாழத்தொடுகின்றோம் !