Thursday, 28 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பொய்யானவர்களிடம்  

உரிமையோடு 

சண்டைபோட்டு  பார்  

அவர்கள் உறவையே   

தூக்கியெறிந்தே  செல்வார்கள்

அவர்கள்  உன்னை 

நேசிப்பதைப்போல்  

நடிப்பதும்  புரியும்

அவர்கள்  உரிமையில்லா 

உறவில்  வாழவே 

பல  உறவுகளை தேடியோடிக்கொண்டே 

வாழ்வார்கள்  

ஓன்றை  நேசிப்பதன் 

அர்த்தங்கள்  பல 

மனிதர்களின்  பொய்கள் 

கற்றுத்தருவதில்  புரிகின்றது !!!

நான் தேடும்  அன்பு 

எந்த  பொய்யான  இதயத்திலும் 

பூக்காது !!!1

 

 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 தன் நிலை

 புரியாதவன் 

மனிதசமூகத்தின் 

நிலையை  சரிசெய்ய 

முடியாது  

தன்
தேவை  

புரியாதவன் 

ஒரு  இனத்தின் 

தேவையை  சரிசெய்ய 

முடியாது !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 புரியாமல்  

விலகிப்போகின்றவர்களிடம் 

விளக்கங்கள்  வீண் 

சுமையென  சுகம்

  தேடியோடுகின்றவர்களிடம் 

கை  நீட்டி  கை பிடிக்க 

கடன்  கேட்பது  வீண் 

காதலும்  இல்லாமல்  

பாசமும்  இல்லாமல் 

வேஷம்போட்டு  நடிப்பவர்களிடம் 

உண்மையை  உரைப்பது வீண் 

காலம்  காத்திருக்கின்றது !!

பூக்களில் பூசப்படட 

வர்ணத்தின்  மேல்  மழைத்துளியாய் !!!




Monday, 25 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எத்தனை  முறை 

என்னைத்  தூக்கி  

எறித்தாலும் 

என்னையார்  

விட்டுப் போனாலும் 

இதயமட்டும்  கல்லாய் 

கிடக்கின்றது  மாமா 

யார் புரியாவிட்டாலும் ! 

நீ  புரிந்து 

எனக்காய் தந்த  

அன்புக்கு   

ஈடாய்  யாருமே 

இல்லை  மாமா 

நீ  இல்லா  உலகம் 

பொய்யான  நியம் மாமா 

நீயே  பிறந்து  வந்து 

என்னை  நேசி மாமா 

உனக்காய்  உயிர் வாட

எனக்காய்  நீயே தான் 
 மாமா !!! 




Saturday, 23 November 2024

மொழியின் ஊமைக்குள் ஒரு கனவின் சாரல் ......................,

மரணத்தின்  வலி 

மாறாத மரணதண்டனை

  தான் போல 

யாருக்கு  நடந்தாலும் 

எனக்கும்  வலிக்கு  தானாய்
இல்லையென்றே  நடிக்க 
செய்தலும்  
எனக்குள்  இன்னும்  

உணர்வுகள் பேசுதே 

தானாய் ! 

இந்த  தண்டனையை   

கொடுக்காதே  இறைவா !!

மனிதப்பிறப்பு  இறப்பு

உண்மைதான்  அனாலும் 

உணர்வுக்கு  புரியவில்லை

ஏன்தான் 

அழுகை  வரவில்லை 

உணர்வுகள்  பறிகொடுத்த 

இடத்திலேயே  எழுந்திட 

முடியாமல்  தவிக்குது 

தோள்கள்  இல்லை 

சாய்ந்து  அழுவதற்கு 

அன்பான  இதயமில்லை 

ஆறுதல்  கூறி  எழுப்பிவிட 

தெரிந்தும்  மனசு  ஏன் 

அழுகின்றது 

 இதயம்  ஏன்  வலிக்கின்றது !!!

புரியவில்லை  தான்  இன்னும் 

பிறவி !!!


Friday, 22 November 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 தன் சந்தோஷங்களை 

தேடும்  மனிதன் 

எழுதி  தொலைத்த 

பொய் காதல் 

தன்னை  தொலைத்த 

மனிதன்  வாங்கிக்கொண்ட 

தியாகம்  காதல் 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 பெண்ணை  இழிவாய் 

நினைக்கும்  சமூகம் 

பெண்ணை  உயர்வாய் 

சிந்திக்க  தவறுவதே 

ஆணின்  தவறுகளுக்கு 

போலிச்சாயம் !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனியாக  போராடும் 

அவள்  வாழ்க்கை 

புரியாமனிதனின் 

பாதைக்குள் 

இன்னும்  குறைகூறும் 

மானிதர்களுடனே  சிக்கிக்கொண்டே 

நகர்கின்றது!!!வெற்றியோ 

தோல்வியே  அவன் முடித்ததை 

அவள்  எழுதுவதாய் கூறும் 

மனிதன்  அவளை  நேசிக்கவில்லை 

என்பதே  உண்மை !!!

Tuesday, 19 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வறுமையும்  பிணியும் 

தாண்டவும்  ஆடும் 


தாய்த்திருநாட்டில்  

களவும் கஞ்சாவும்  கொலையும் 

காட்டுக்கடங்கா காளைகளின் 

 கைவண்ணமாய் தோன்ற  

இருப்பவர்  திறக்கும் 

கோயில்  வாசலில்  காத்திருந்த 

ஏழைகளின்  புன்னகை 

தட்டுக்கு  சோறுபோட 

ஒரு  தலைவன்  வந்தான் 
இனம்  கடந்த  நல்ல 

மனிதனாய் !!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  ஒரு பெண்ணின்

 வாழ்க்கை தான் என்ன  

காலம்  கடந்தும் 

வயது கடந்தும் 

இன்னுதான்  புரியவில்லை 

எனக்கு சும்மா  இருப்பதாய் 

சும்மா  பெண்ணை 

சொல்லும்  மனிதனின்  

முன்  சும்மா  இல்லையென 

ஒன்றை 

செய்திட  துணிந்தால் 

அவளுக்கு  என்ன 

அறிவு  இருக்கு  இதை 

செய்யயென   கிண்டலும் 

கேலியும் பேசும் 

வாய்களை  என்ன  செய்து 

மூட  ஏலம் போடும் 

சமூகம்  எனன எதிர்பாக்கின்றது 

பெண்ணிடம்  காமக்கூடு 

தாண்டி!!!


 

 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வாய்ப்புகளை   

வாயில் போட்டு 

வாய்களே   கெடுக்கும்

சிறப்பு  நம்  இனத்தின் 

சிறப்பு    ஒன்றை 

இழந்து  சிந்திக்கா  

அறிவுச்சிந்தனை   அடிமட்ட 

மக்களை  பாதிப்பதால் 

சிந்தனைகள்  எல்லாம் 

சிற்றின்பச்சிறைச்சாலைகளே !!!

Friday, 15 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

உள்ளத்தில்   அழகான

அன்பியிருந்தால்  

நம்  உணர்வுகளை 

காயப்படுத்தாமல் 

 நம்மை பொக்கிஷமாய்  

காக்கும்   எனறும் !!

நம்  வலிகள்  கூட

  புரியவில்லை  என்றால்  

அன்பே  போலிதானே 

இங்கே !!உணர்வுகள்  அர்த்தமற்ற 

பொய்யாகிப்போகும்  போதே 

அன்பும்  ஏமாற்றம் 

 அடைகின்றது 

ஏமாற்றம்  அடைத்தபின்பே 

தனிமையாகின்றது !!கொடுத்தாலும் 

கிடைத்தாலும்  அன்பை 

சுயநலமாக்கதிர்கள் !!!





குட்டிக்குட்டிச் சாரல்......,

 தேடிப்பார்  தேடலில் 

நல்ல  புத்தகம்  

கிடைக்கும்  என்றார்கள்  

இப்போதெல்லாம் 

தேடினால்  வாழ்க்கையில் 

வாழக்கூட  வாழ்க்கையே 

வாழ்க்கை  படப்புத்தக
மாய் 

அதிகமாய்  கிடைக்கின்றது !!

Thursday, 14 November 2024

மொழியின் ஊமைக்குள் ஒரு கனவின் சாரல்

 தினமும்  

அவள் ஒற்றை தீயை  

பற்ற  வைத்திடும் 

போதெல்லாம்  

அவள் 

தன்னுடலை  தீயில் 

ஈட்டே  பார்க்கின்றாள்

எரியும்  தீ நின்று  

சாம்பல்  அள்ளும் 

போதெல்லாம்  தன்னைத்தானே 

அள்ளி  கொள்வதாய் 

கையில்  சுமக்கின்றாள் 

ஆனாலும் 
தண்ணீரில்  

கரைக்கவில்லை 

அதைமட்டும்  விட்டு  விட்டு 

  காத்திருக்கின்றாள்  மரண நாளில் 

அன்பு  மனுக்காய் 


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வெளிநாட்டு வாழ்க்கை 

வெள்ளிப்பணம்  கையில் 

வேலிகள்  இல்லா 

 திறந்த  உலகம் 

 உழைத்தாலும்  உழைக்கா  

விட்டாலும்

தேவைக்கு  உண்டு பணம் 

அனாலும்  எவர்  கையிலும் 

இல்லை  ஒரு பண்பாடு 

சுகந்திரம் சுகம் தேட 

சுகமேயில்லாதே   போகின்றது 

வாழ்க்கை  வலுக்கிவிழுந்து 

ஏழாமலே  கிடந்திட 

துடிக்கின்றது  இல்லறம் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


கற்பனைகளை கொஞ்சம்  

ஓரமாய்  வைத்திட்டு 

உள்ளத்தை  கொஞ்சம் 

திறந்து இல்லத்தை  

திருப்பிப்பாருங்கள்  மரணம் 

துரத்திக்கொண்டே  வாழும் 

வாழ்கையில்   தனிமையின் 

சிறையில்  எதையே 

தேடி  எதையும் ஏழுதா 

வெள்ளை  காகிதமில்லை 

வாழ்க்கை !!நீங்கள் 

தூக்கிப்போட்டு  போக 

அழகான  உயிர்கள் கூடிவாழும் 

அழகிய  கூடு  இல்லம் !!

நிறையவே கொடுத்து  

நிறையவே எடுத்து  

அள்ளிக்கொண்டு  போகங்கள் 

அன்பையாவது!!!




Wednesday, 13 November 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நம்மை  யாருக்கும் 

பிடிக்கவில்லை  என்றாலும் 

நம்மை  யாரும்  

நேசிக்கவில்லை என்றாலும்  

நம்மை  ஏமாற்றும் 

மனிதர்களுக்கு  மட்டும் 

ஏனோ  நம்மை 

 நிறைய பிடிக்கின்றது !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உ

டல்  தனை   தேடியோடும்  

உணர்வுகளின் சங்கமங்கலில்

 கரைந்தோடும்  உணர்வு 

சொல்லும் காதலுக்குள் 

தடுமாறும்  உயிர்களின் நடுவே 

ஒரு  

உள்ளத்தின்  உணர்வுக்குள்   

மௌனத்தின்  வலிகள்  

பேசிடும்  மொழியில்  

ஒரு  நீர்துளிக்குள்  மரணத்தை 

வென்று பூத்தது  ஒரு  ராணுவ 

உடைக்குள்  அழகான   காதல்............  

Monday, 11 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வலிகள் நிறைந்த 

பாதையென தெரிந்தும் 

ஒரு  பெண் 

 தைரியமாய் 

முடிவெடுக்கும்  துணிவு 

பல  ஆண்மையிடம் 

இல்லைதான்  ஆமையிருக்கும் 

இடத்தில  பெண்ணிருந்தாள் 

ஆண்மை  தள்ளியே 

வாழ்வதே  உண்மை 

எதை  ஈடாகக்கொடுத்தலும் 

வாழ்க்கை  பயணம்  என்னவோ

அவளுக்கு  இலகுவாய் 

அமைவதில்லை  என்பதே 

நியம !!1

 

Monday, 4 November 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு  தமிழின் 

முதல்  படியில் 

ஒரு  தமிழ் 

எதிரியாகின்றது  ஒரு 

தமிழ்  வாழ  ஒரு  

தமிழ்  முடிவுரையாகின்றது 




விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒவ்வெறு தோல்வியும் 

ஒருவெற்றியின் 

 ஏணிப்படி  என்றார்கள்  

என்  ஒவ்வெறு  தோல்வியும் 

தனிமையின்  சிறைவாசம் 

கொண்டதேன் 

 மனிதன் 

பணத்தை தேடினான் 

வெற்றியின்  படியில் 

நின்றான்  நான் 

அன்பை  தேடினேன் 

தோல்வியின்  படிகளில் 

நடக்கலானேன் அன்பு 

பணத்திடம்  தோற்றுக்க்கொண்டே 

இறக்கின்றது !!இது 

காலகாலத்தின்  தீர்ப்பு