Saturday, 3 March 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இசைக்குள் என்னை வைத்து
கவிதைக்குள் அவனை  வைத்து
சாரலில் துறல் போட பொற்காலம்
தருகின்றான் !!

யாரென தேடவில்லை
ஆனாலும் நானெ சொல்கின்றான்
வீரம் வாயட பாசம் கையேந்த என்னை 
அடிமையென்கின்றான்
 பெண்ணியம்தெரிந்தும்
பெண்னிதயத்தை சாடுகின்றான்
ஆணிதயம் தாயாய் மாற
 அவனே நிக்கின்றான்
பொய்யாய்  நடிக்கின்றான்-ஆனாலும்
வீராப்பாய் சண்டையிடுகின்றான்
தொலைதூரம் சென்றும்
என்னைத்தொலைக்காமல்  

தேடுகின்றான்
தொலைந்ததை நான் மீட்டிட  
என்  ஆசைகளை கண்முன்னே 
வைக்கிறான்
தொலையாமல் நானிருக்க 
அப்பப்ப என் கோவத்தை  
தூண்டுகிறான்
என் கோவத்தைக்கண்டும் காணாமலும் 
 ரசிக்கின்றான்
நீண்டு தொலைந்த வாழ்கையை
மீட்டியெழுந்திட  பூக்களை தருகின்றான் !!!

No comments: