Thursday, 21 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழுகுரலின் ஓசை என்னை
தாக்கும் போதெல்லாம்

உடைந்து சிதறுகின்றேன்
தனியாய் !! உள்ளோ ஓர்
குழதையின் அழுகுரல்
 ஒலித்துகொண்டே இருப்பதால்!!

சோகங்கள் என்னை தாக்கும்
போதெல்லாம் வெறுத்து ஓடுகின்றேன்
தனியோ ! உள்ளோ என்னை
ஓர் குழந்தை திட்டிக்கொண்டே
இருப்பதால்!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகளை அதிகம்
பேசிய   உன்
கடமையை மறந்திடாதே
வலிகள்
வழிகளை மறைத்திடும்
ஆயும்
அதனை  நினைப்பதற்கு
ஓர் நாளை மட்டும் தேர்ந்தெடு
அதனை மறந்திட முடியாது
என்பதால்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் கண்ணீர்துளிகள்
சாதனைபடைக்கவேண்டுமா
நித்தமும் அழாதே!!
உன்னை மற்றவர் நேசிக்க
வேண்டுமா
நடிக்கக் கற்றுக்கொள்!!
உன் புன்னகை
அர்தமுள்ளதாகவேண்டுமா
புண்பட்டாலும்
 புன்னகை்க கற்றுகொள்

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் விடுதலை
நேசிக்கபட
உன்னை  தயாராக்கிகொள்
மற்றவர் நேசிக்க
அதனை யோசிக்க வை
உன்னால் உணராவிடுதலை
மற்றவரால் நேசிக்கப்படாது!!!

Monday, 18 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்..

பாதி உயிரான எந்தன்
உயிரில் இருந்து என்
உதிரத்ததை
உன் எழுத்தாணியின்
மைதுளியாய் அனுப்புகின்றேன்


நீ தொடர்வதற்காய்
இறுதிவரை உன்னிடம்
கிடைக்காத ஒன்று
 உன் கற்பனைகளில் வாழ்வதால்!!


Sunday, 17 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

கம்பன் சொல்லி
புரியா க்கண்ணின் மொழி       உன்  கண்கள்
கண்டடு புரிந்ததடா எனக்கு!!

உன்னைப் பற்றிய விழிகள்
இன்னும் பற்றியதை
பற்றிய படியே நடக்கு
என்னோடு!!
கண்ணன் கண்ட கண்ணின்மொழி
ராதை பெற்ற காதல்மொழி
இங்கே ஆனாதடா உயிராய்!!

நீதான் ...நான் ....


வசந்தை இலையுதீர்காலமாக்கியது நீ
வார்தைகளை வசப்படுத்தி
விளையடியது நீ
இயத்தின் பாசத்தை
நேசமாக்கியது  நீ
நேசத்தை நடகமாக்கியது  நீ
தேடி வந்த  இதயமதை
தொல்லையென்றது நீ
தொலைவானதும் திட்டியது நீ
தொடர்கதையெழுதியதும் நீ
தொடர்ந்ததை அறுத்ததும் நீ
அனந்தம் கொண்டதும் நீ
சந்தேகத்தை உருவாக்கியதும் நீ
விடையை கேள்வியாக்கியது  நீ
அந்த கேள்விக்கு விடைதேடுவதும் நீ
தனியாய் நடந்ததும் நீ அதையே
விரும்பி வாழ்பதும் நீ
அன்றும்  நான் நானே தான்
இன்றும் நான்  நானே தான்!!!


Saturday, 16 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்......

உன்னைச்சுற்றியெரு
 கூட்டம்
உன்வார்த்தைகளுக்கு
ஆமாபோட்டால்
உன்னால்
உன்னை அறிந்திடமுடியாது
 தனித்து விடப்படும் வரை
உன் தவறுகள் கூட
உனக்கு சரியாய் தோன்றும்
 நீ உன்னை அறிந்திட வேண்டுமானால்
தனித்து சிந்திப்பாய்யாக!!!

Tuesday, 12 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஐந்தறிவு ஐீவன்
ஒன்றையொன்று பற்றிக்கொள்ளுது
ஒன்றையாய்!! ஆறறிவு
ஐீவன் ஒன்றையொன்று
பற்றிடாது தடுமாறுது
இரட்டையாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,



எந்தனை மதவிகள்
உன்னால் அவதரிதத்தாலும்
ஒரு ஐீவனின் கண்ணீரோ
நாளைய உன்னை ச்சுற்றிக்கொள்ளும்



Monday, 11 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்

ஓர் பட்டுபுளுவின்
மரணம் பட்டுப்புடவையாது
ஆனால்!!இங்கே
ஓர் பட்டுபுடவை
தீக்குளிக்க காத்திருக்கு
அவளின் மரணத்திற்காய்!!!

Thursday, 7 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,




உடைந்திட்ட மனசில்
சிதைந்திட்ட உன் முகம்
இன்னும் அழிந்திடாது
அங்கங்கே மறைந்து
மறைந்து  தோன்றுது
 உன்னைப்போல்.............

Wednesday, 6 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் ஆன்மாவின்
உயிர்வேரில்  உன்
உயிர் இணைந்தால் தானோ!!

எல்லா ப்பிறவியிலும்
உன் நினைவுகளை
புறத்தால் அறிந்து
அகத்தால்  மலர்கின்றது
இந்த அல்லிமலர்!!

என் ஆன்மாவின் உயிர் வேரை
எங்கே தேடி உன்னையும்
என்னையும் பிரித்திட சொல்!!

Tuesday, 5 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்...........



நான்தொலைக்க தொலைக்க
  நீஅதைபற்றிகொண்டாய்
    நான் தொலைத்து கொண்
 இருந்தேன் நீ   பற்றுவதால்
நீ என்னை மறந்து விட்டாய்
என்னிடம் தொலைக்கவும் ஏதுகுமில்லை
என்றபோது புரிந்தது உன்
நேசங்கள் என்தொலைப்பில் இருந்தது


Monday, 4 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

இருஇதயஉணர்வில்
ஒருஉணர்வு உதயமானால்
சுகம்



ஒரு இதயத்தின் உணர்வு
இரு இதயத்தின் உணர்வில்
உதயமானால்  அது சுமை

Sunday, 3 November 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இருள்ளிற்றி ஓளிதேடி
இருளான வாழ்வை
ஒளியின்றி வாழக்கற்று
கொண்டேன் ஒளியே 
நீ வேண்டாம்!!
உயிரான உடலிருந்தும்
வலியான இதயதின்
ஓளிதேடி உறவாடி 
உயிரற்ற உடலாகி
 வலிதாங்கி
வாழக்கற்றுக்கொண்டேன்
வலிபோக்க ஓளியோ 
நீ வேண்டாம்!!
உறவிருந்தும் உடனிருந்தும்
உறவாகா தனிமைக்கு ஓளிதேடி
அலைமோதி அறிவின்றி
அகதியான தனிமைக்குதுணையாக 
நான் வாழக்கற்றுக்கொண்டேன்!!
 ஓளியோ நீ வேண்டாம்!!
கல்லறைகதவிற்கும்
கருவறைகதவிற்கும்
உள்ளோயே நானானோன்
எனி ஒளியோ நீ வேண்டாம்!!!