Tuesday 11 September 2012

ஏமாளிகள்


புரியாத் தேல்விகள் ஏமாற்ற
கதவுகளை மெல்லத்திறக்க
வெண்பிஞ்சு மனசு சிந்துகின்றது
சிந்தனையின்றி!!

அள்ளிய கைகள் காட்டிடா
பாசத்தை  எண்ணியபடியே
என்றும் தொலையாய்  நடக்கின்றது
சிந்தனையின்றி!!

பாராமுகம் கொண்டு விட்டு
விலகும் உறவு தன்னையே
வெறுத்துகொண்டு நடக்கின்றது
சிந்தனையின்றி !!!

பிரிந்த வாழ்வு திசைகாற்றில் தள்ளாட
பிரிந்த இதயமே வேரோர் உறவோடு
கைகோர்க்க  அழிந்த ஆசை
அதிகாலை கனவானதால் நடக்கின்றது
சிந்தனையின்றி!!

எண்ணிய எண்ணம் கற்பனைகாற்றாய்
 களைந்தோட !வெட்டவெளி
 பக்கத்தில் விரக்கிப்பூ
உணர்வின் பக்கமாய்விரிய
 அறிவின்முதிர்ச்சியை உணர்வின்பூக்கள்
அப்படியேசிதைக்க!! சிந்தனை இழந்து
தன்னைத் தொலைத்து தட்டுதடுமாறிய
உணர்வின் பக்கத்திற்குள் புதைந்து
நடக்கின்றது சிந்தனையின்றி!!

தெளிவிழந்த சிந்தனை பாசத்தால் தவிக்க! 
புரியா குழப்பதிற்குள் கோமாளி வேடமிட்டவர்
 நிமிடத்தின்பக்கங்களை தன்பக்கமாய்
மாற்ற எதையும“ புரியா ஏமாளியாய்
நடக்கின்றது சிந்தனையின்றி!!
தன்னை தொலைத்து எடுதழித்து சென்றதன்
வாழ்வு அந்தனையும் மறந்து அன்பின்தேடலில்
பூமிவிட்டு சிறகடித்து பறந்திட
 தன்னை மறந்து நடக்கின்றது சிந்தனையின்றி!!

கொஞ்சிய கோமாளிகளின் வர்ணங்கள்
 மெல்ல வெளுத்து  தற்காலிக குடையான
 உண்மையில்லா பொய்களின் கைப்பிடிப்பு 
ஊமைவாழ்வானதால் அஞ்சம்கொண்டு
நடக்கின்றது சிந்தனையின்றி!!

ஒன்றை ஒன்று பொய்கள் கைபிடித்து
மன்னிக்கமுடியா பிழைகளை மண்ணில்
செய்து!!! ஒன்றைஒன்று காயபடுத்தி
 தன்னை தானோ ஏமாற்றிக்கொள்ளது
நடக்கின்றது சிந்திக்காமலே!!

No comments: