Tuesday 18 September 2012

.இப்படியிருந்தால்..எப்படி தான் சாதிக்க?????

தொலைந்த வாழ்விற்குள்
தொலைதுரமான கனவு
வரைந்திட்ட காலதிற்குள்
விரையமாக்கியது  வயதை!!

விரைந்தும் முடியா ஏழ்மைக்குள்
தொல்லைகளை சுமந்து 
வரும் விதி
சும்மாவிட்டாலும் விட்டிடாடு
துரத்து  இல்லா 
கற்பனைக்கதைகளை
சேர்த்தே கூட்டிக்கொண்டு!!

பெற்ற தாயவளுக்கு கொடுத்திட
முடியா பணம் வந்த போதும் சென்ற போதும்
வட்டிப்பணதிற்கோ வந்திடாமையை
எப்படி எப்படியென சிந்தித்து சிந்தித்து
உழைத்ததில் உயிரிருந்தும்
இல்லா வாழ்கை ஒன்று கூடவோ
கூடியோ நடக்க அருமையும் பெருமையும்
மரணதிற்கு தான் புரியுமென்றது மனசு!

சும்மா இருந்தாலும் சும்மா சென்றாலும்
சும்மாசொல்லக்கூடாது பணம்
பக்குவமாய் பந்தாடுது வாழ்வை
எல்லாமே பணமென்பதால்!!

பாசம் இல்லாதே இருந்தாலும்
இல்லாப்பணம் பொய்பேசும் தனக்காய்!!
இல்லாதபோதே எல்லாமே தேவையென
கூட்டிவரும் இல்லறவாழ்வின்  தேவைகள்
சொன்னாலும் புரியாதிருந்து கொண்டோ
என்னாலும் சொல்லாதே தண்டிக்குது
 சோதனைகளால்!

கல்லாத கல்வியை என்னாலும்
கற்றும் கண்டிடமுடியா ஆழம் போல்
விட்டு விட்டு  போகின்றது
இயலாமை கோழையாக்கி!
எதையும் செய்திட முடியா தவிப்பாக்கி
கண்ணிருந்தும் குருடாய் போன உதயம்
எக்காலமும் வராது நிற்பது எதனால்?????????????

No comments: