Friday 28 November 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஒரு துளி...

துன்பம் மெல்ல மெல்லத்
தொடர
உணர்வுகள் என்னைத்
தொட்டு வதைக்க

வறுமை என் வீட்டுக்
கதவு தட்ட
உறவுகள் எனனை விட்டு
விலக

பசியினால் என் குழந்தை
கதற
தெருத் தெருவாய் நான்
வேலை தேட

வசை பாட நால்வர்
எனைத் தேடியழைய
என் தருத்திரம் வாசல்
திறக்காமலே வீட்டுக்குள்
வாழ!!!

வீதியோர சிருசும் பெருசும்
என்னைப் பார்த்து கேலி பேச
நாலுபோருக்கு நாலு கதையாய்
என் வாழ்கை மாற

வழிதெரியாது வழிதேடிய
பாதையில் வழிமாறியது
என் வாழ்வு நீர் சுமக்கும்
இயந்திரமாய்

ஒரு துளியில் என் கதையை
நான் எழுத
கண்ணிலிருந்து வழிந்த
துளி அதை அழித்தது
அருவருப்பு நீயொன்று......

2 comments:

Anonymous said...

மிகவும் வலி நிறைந்த கவி தை ,ஒரு சில எழுது பிழைகள் தவிர சொல்லவந்ததை சொல்லியவிதம் அழகு ,திருத்தி பிரசுரிக்கவும் மிக நன்று. வலியின் கதை. நிலாமதி

சு.கஜந்தி said...

நன்றிகள் ரசித்து பிழையை சுட்டி காட்டிய உங்களுக்கு