Wednesday, 11 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

எம் இனத்தின் உயிர்குடித்து
குருதி தனில் நீ
நனைந்தும் அடங்கிடாத
உன் தாகம்
இன்னும் தொடர்கின்றது தொடர்
கதையாய்!!

வருடத்தில் ஒரு
முறை நீ தோன்றினாய்
எம் இனத்திற்கோ
பல முறையேன்வந்தாய்?

சின்ன உயிர் தனைக்
கொள்ள எத்தனை
பெரிய ஆயுதங்கள்
பாசத்தைச் சொன்ன
இதயங்கள் கருகிய
கோலங்கள் கண்முன்னே
பார்த்துப் பார்த்து அழுதிட்டோம்
கண்ணிருந்த கோழைகளைாய்!!

ஆனாலும்! நாம்
இன்னும் கரைகின்றோம்
குருதியில்  
விடுதலைத் தீயில் எரிந்திட்டாலும்
எம் கண்முன்னே நிழலாய்
உன் சோகங்கள் மாற்ற முடியா
வலிகளாய்!
யாரிடம் சொல்வது  நாம்
 மனிதனுக்குள்  மாறுபட்ட உயிர்களான
கதை...?

Tuesday, 10 July 2007

ஹைக்கூ... கவிதைகள்

தாய்யூட்டிய பால்


அவள் இனத்தை அழித்தது 
ஆணாதிக்கம்!!!
*******
காதல் பைத்தியத்திற்கு 
  வைத்தியம்  செய்தது  பாசம்!!! 
*********
அழகிற்க்காய் ஆடைகிழிப்பு
வறுமையாடைதேடித்தவிப்பதோ 
 நூல்!!     
 
*********
தனிமை சிரிப்பில்  உரிமைப் போராட்டம் 
குடும்பசிதைவை!!
*********
பொய்யான முகங்களால்
பரீட்சைவந்தது மூகமுடிக்கு!!


*********
என் கணவனுக்கு எல்லாம் நானென்றாள் 
உணர்ச்சியை விற்று!!!
*********

பெண்விடுதலைக்காய்கருந்து 
சொன்னான்வீட்டிலோ 
பெரியபூட்டு!!

*********
ஆடம்பர வாழ்கை வெள்ளித்தட்டில் 
பிச்சையெடுக்கின்றது  
பாசம்!! 

*********
சீதனச்சண்டையில் இருவர்
பாடோ பெரும்பாடு போலிமுகம்!!  

*********
முகம் தெரியா முகவரியில்
உணர்ச்சித் தடுமாற்றம்
நட்பு !!
*********
கல்லறைக்கல்லுக்குள்  
 நம்  உணர்ப்போராட்டம் 
வாழ்கை     
*********
நீ சாதிக்க  கனவு 
என் கனவின் சாதனை 
கண்ணீர் !! 
*********
திருமணச் சந்தையில்
மீண்டும்  பத்துப்பொருந்தம் 
மறுமணம்!!! 

*********
பெற்றோர்கள் பிரிவுக்குள் 
பிள்ளைகள் தூது !நாளைய
வாழ்க்கைப்பாடம் !!

***************************
காலத்தின்  மாற்றம் வேடங்களில் 
வில்லத்தனம் வில்லியானது!!! 
****************************
இன்றைய நட்பின் தேடலால்
நீ  நாளை யாரோவானாய் 
நட்பின் ஆழம்
*************************
என் இதயம் வலிக்குள்  நீ 
தொல்லையானாய் நினைவுகள்!
***********************
மொழியும்   ஊமை
உன்னைப் போல் மெளனம்.........
**********************
அம்மா திண்டாட  மது 
கொண்டாட   மகளுக்குப்பிறந்தநாள் 
************************
தொடர்களின்  சோகத்தால் 
அழுதழு  ஓய்ந்தாள் சின்னத்தொடர் 
***************************
ரசிகன்  ரசினை தொலைத்தான்
 காதலால் !!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஈழமாம் எம் நாட்டில்
வாழ்வதற்கு வழியின்றி
உண்பதற்கு உணவின்றி
அலை பாயும் எம் இனத்தை
கரை சேர்க்க யார் வருவார்?

வேதனையில் எம்மவர்கள்
துடிதுடிக்கும் காட்சியினை
பார்ப்பதற்கு கண்ணுண்டா?
கொடுமைகளைக் கேட்பதற்குக்
செவியுண்டா? இதனை
கூறுவதற்கு யார் வருவார்?

நீதிகள் வெந்த பின்னர்
சுடர் விடும் அநீதிகளால்
எரிகின்ற ஈழத்தை
அனைத்தெடுக்க இங்கே
யார் வருவார்?

இதயங்கள் காணுகின்ற
இன்பக்களை வென்றிட முடியாமல்
இருள் தனில் தவிக்குதையா
ஒளியின்றி எம் இனம்  இம்மினதிற்காய்
ஒளியினை  ஏற்றி வைக்கயார் வருவார்?