Saturday, 5 May 2012

மொழி

பள்ளியில் படித்தெல்லாம்
வாழ்க்கைக்கு உதவ
வில்லை
உள்ளத்து மொழியினை நாவிற்கு
மறைக்கத்தெரியவில்லை
கள்ளத்துமொழிபடிக்க ஒர்
பள்ளிக்குப் போனதில்லை
நடிப்பின்மொழிக்கேர் வாத்தியார்
வைத்ததில்லை
பொய்யின் மொழிகற்று
வாழப்பழகவில்லை
ஏமாற்றி வாழ ஒர் மொழியும்
தேடவில்லை
அறிஞ்ஞரின் மொழியினை
கற்றிட தோன்றவில்லை
அறிவின் பக்கத்தை அறியும்
அறிவும் எனக்கில்லை
 அறிவுடையோர் கேள்விக்கு பதிலும்
அறிவு கொண்டு சொன்னதில்லை
மனிதறிவின் தத்துவத்தின் பக்கங்களும்
 என் அறிவிற்கு புரியவில்லை
மனிதப் பிறப்பின் கணகிற்கு கொடுத்த
மொழியதனை தேடியும்  நான் கற்கவில்லை...................................................



Friday, 4 May 2012

என்றும் அன்புடன்

குழந்தை பருவம் அறியா அறிவு 
 அன்னை அன்பைமட்டும் புரியும் உணர்வு
சொன்ன பக்தியில் எதையும்கேட்கா
 அறிவில் வந்தது பக்தி காதலாய்உன்னிடமே!!

வளர்ந்த காலம் இளமைக் காலம்
கிண்டலும் கேலியும்  என்
கூடவோ தொடர பாதி மோதகம்
எனக்கே எனக்கென்றுசண்டையிட்டு 
வாங்கி உண்ண வந்தது பக்தி காதலாய்உன்னிடமே!!!
பருவக்காதல் உணர்ந்த காலம்
உன்னைப் போல் அன்னை மகன்
காணா பெண்ணாயாய் தேடிய
 பக்தியில்  சுற்றிய மனம் சுற்றியோ வந்தது
காதலாய் உன்னிடமே!!
தாய்மை பருவம்
கண்ட காலம்! உன்னை போல்
ஒர் மகன் எனக்கும் வேண்டி
வந்தது பக்தி  காதலயாய் உன்னிடமே!!

எல்லாம் முடிந்து  இழந்த காலம்
தவியாய் தவித்த  மனசு யாருமற்று
பட்டுநின்றநிலையிலும்
துணையென வந்தது
பக்தி காதலாய்உன்னிடமே!!

மேலும் மேலும் துயரங்கள் 
 தீட்டிப் பார்த கூரிலும் குத்தியெடுத்து
 வார்தைதெடுக்கும்  உறவின் சொல்லுக்கு
தேனீயற்ற தேனைப் போல்இனிமையாய்
 மனம் வந்ததுபக்தியோடு காதலாய்உன்னிடமே!!

எதுமில்ல வாழ்வில்
எதுகும் செய்யா
 உன்னை எதுகும் கேளாது
எப்பவும் அமைதிதேடி மனம்
அமிர்தமாய் நின்றிட
 வருகுது  பக்தி காதலாயாய் உன்னிடமே!!

ஆணைமுகம் கொண்ட உன்னை
அன்பிமுகம் பார்து ஆற்றில் கரையும்
உன்னில் அழகு முகம் கண்டு தொடருது
பக்தி உன்னிடமே காதலாய் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


Tuesday, 1 May 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

இதயத்துளி

சுட்டிக்கதையாகி
சுடரில்லா ஒளியாக்கி
 வெட்டிப் புதைத்த நினைவாகி 
தட்டித்தட்டி உயிராக்கி
மெல்லக் கனவாக்கி
கற்பனைக்குள் சிறகாக்கி
எடுத்தென்னை உறவாக்கி
 சுட்டு எரிக்கும் தீயாக்கி 
எரிந்த சாம்பல் வாழ்வாக்கி 
பின் தள்ளிக் கண்ணீர்க் 
 கதைசொல்லி 
 கதறும் மனமதனை
 விட்டுப் பிரித்து  தவிக்கவிட்டு
தவிக்கும் எண்ணத்தை சுயநலமாய்
அழித்து  திரும்ப திரும்ப
பிரியா மணலால் கட்டி
துடிக்க துடிக்க எரியும்
வலிகள் கொண்டுத்தும் 
என்றும்   துடிக்கும் 
                            இதயம். நீயேயானாய்  ..............