Sunday, 14 August 2011

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

முத்தாடாது எடுத்தமுத்தவள்
தந்தியாடிய தரைநிலவாய்
என் உயிருக்குள் நின்றாடிட 
வந்தவள்

திட்டியாடிய பொழுதுகள்
வந்து வந்து வதைத்தாடிடும்

தொட்லிட்ட விதியவள்!

துயரத்துளிகளால்   என்னை 
மெல்லென   ஆட்டி 
கட்டி வைத்த தைரியங்களை
கண்ணீரால்  உடைப்பவள்!

தொட்டணைத்த கைகள்
பிடியின்றி தவிக்க
தேற்றிடா மனதுக்குள்
சோர்வாய் வந்து சுகமாய் உறங்குபவள்!

சொல்லொடுத்து பாமாலை
பாடிய இதயமும் துடிப்பிழந்து
தவிக்கின்றது தாய்மையால்..............................

கனவானகற்சிலை......

என் நிழலுக்கு
நிழலொன தொடர்ந்த
நிழலான உணர்வென்று
நியமானச் சொல்லி
கனவென்றை உள்ளோடு
விதையாக்கி என் நினைவோடு
நிழலாகிக் கதைபடிக்க!!

அறிவிலந்த மனமிது
அதற்காய் காத்திருந்து
காத்திருந்து சுகமிழந்து
தான் தவிக்க!!

சொல்லியும் சொல்லாமலும்
சுமையான வாழ்வது
உயிர்கொண்ட உணர்வால்
மெல்ல மெல்ல தனக்குளுடைய!!

பெண்ணிதயம்  தானிழந்து
தன்யையே தானழித்து
தனக்குள் தான் தொலைய            
மறந்ததிடா நினைவுகள்
உணர்வைக் கல்லாகி
கொஞ்சம் கொஞ்சமாய்
தன்னையோ கல்லாக்கி
கற்சிலைகனவாகின்றது.............................

யாரிவள்.........

கதிரவன் கனிமொழி
காரிருள் ஒளிமொழி
காந்தவில்மொழி
தென்றலின் அசைமொழி
பூக்களின் புதுமொழி
இறைவனின் அருள்மொழி!!
காகிதப்பொருள்மொழி
கல்லின் கூர்மொழி
பாதையின் பாதமொழி
முற்களின் முதல்மொழி
முவேந்தர் சொல்மொழி
முதுமையின் தாய்மொழி
மூத்தவர் பண்புமொழி!!
அறிவில்லா பார்வைமொழி
அடைக்கல பறவைமொழி
சிந்தனை சிறகுமொழி
சிந்திக்கா இதயமொழி
இன்பத்தின் சொல்மொழி!!
சொல்லிடாத் துயர்மொழி
 புன்னகைக் கண்ணீர்  மொழி
களைத்திடா கதைமொழி
கவிதையின் விழிமொழி
கருணையுள்ளோர் அன்புமொழி.....