Wednesday, 11 August 2010

கொடிமலர்...............

இட்டவாசம் எடுத்தவாசத்தை
தொலைத்த வாசமாக்கி விட்டு!
கொண்ட வாசம் மறந்து
இல்லாவாசம்  பேசுவதெனால்   !!!

இல்லாமை தந்த இயலாமை
வந்தாலோ உள்ளம் ஒர் வாசம்
தந்து அள்ளிக்கொள்ள இயலாது
ஒன்றை இரண்டாக்கி
கொள்கை இல்லா தலைவனாகி
பொய்யான வாசம் வீசுகிறது  !!!!!!!!



கடவுள் கொடுத்த வர்ணம்
மாறப் பூவிற்கு !!

கொடுத்த   வாசம் மறைத்து
இட்டு ஒர் வாசம்    பேசி              
பொல்லா பூவாய் பொல்லாப்பு
கூறினாலும்!!

முற்றமில்லா காட்டுக்குள்ளும்
மாறவாசத்தோடு

காட்டின் மழைக்கவிதை போல்
கசத்த நினைவை சாபமாக்கி

 மலரும் இந்த பூ................

Wednesday, 4 August 2010

விழியோர வலிகளால் சிதறும் சாரல்...........

வாடகைத்தாய் 

பிரமா செதுக்கிய
அழகுப்பெண் 
ஓவியத்தை 
குறை காண்டதால்
மனிதன் செதுக்கினான்
பிரமாவை பெண்    
ஓவியமாய்.... 


  வாழாவெட்டி   

சோகக் கதையின் 
கதாநாயகி
பலர் கண்களின்  
பரிதாபத் திருமதி                  
வாழ்கையோடு போராடினாள்
தன்னிலமை காத்திட- 
ஆனாலும்
மனித விஷப்பார்வைகள் 
நித்தம் நித்தம்  அவளை 
 மாதவியாய்..தேடுகின்றனர் !!

செவ்வாய்தோஷம் 

பணத்தேடலில்!
தொலைந்திட்ட பாவை
செவ்வாய் தோஷம் வந்ததால் 
வாழவாழ்க்கைக்குள் 
மறைந்திட்ட உயிர் ஓவியம்
எதுகை மோனைக்காய்
வாழ்கின்றது பல காலம்!


எழுதுகோல்

என்னை மட்டும் காதலிக்கும்
காதலன் இவன்!!
என் சுவாசம் உள்ள வரை என்
கூடவே நடப்பான் !!ஆனால்
நாளைய கோவலன்!


காகிதம்

அவன் நினைவுகளை
கிறுக்கி கிறுக்கி!
உன்னைக் குப்பைத்
தொட்டியில் நான்
போட.....
அவனே!                                     
நான் கிறுக்கிய
உன்னைச் சேகரித்து சேகரித்து
என்னை குப்பைத்தொட்டியில்
போட்டு விட்டான்....


பொருத்தம்

மனசும் மனசும் சேர்ந்தே 
காதல் எழுத 

உறவும் உறவும் புரிந்து
மகிழ்ச்சி தந்து!
அவன்  குறிப்பும் 
அவள்  குறிப்பும்
பொருந்தவில்லையென
சங்கடமாக்கினார் ஐயா!! 
காதல்  வாழ்வை!!!

சுமை

உனக்கு நான் 
சுமையென்றாய்
சரியென்றேன்
என்னால்
 வாழ்வே சுமையென்றாய்
பிரிந்து போனேன்
இன்னெரு உறவை தேடியதால்
நான் சுமையான கதை
இப்போது தான் புரிந்தது
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று.......


உரிமை

மூன்று முடிச்சு 
போட்டதும்
இப்படியிரு அப்படியிரு
அதைவிடு இதைவிடுயென
உனக்காய் என்னை மாறிய
உன்னால்....... 
முப்பது
வருடமாகியும் எனக்காய்
ஒரு கெட்ட பழக்கம் கூட
விட முடியவில்லையே...
ஏன்?


காயம்

பல பெண்களின் இதயத்தில்
காதல் அம்பை விட்டு
ரசித்த என் நண்பன்...
அவன் எய்த அம்பு
அவன் இதயத்தை
தைத்த போது வலியால்
மதுக் கடை தேடினான்
காயத்தை ஆற்ற......

உண்மை

சத்தியம் சத்தியமென
பிள்ளைமேல் சத்தியம்
செய்தார் ! கணவர்
சாயங்கால மதுக்கடை
திறக்கும் வரை..
சத்தியம் செய்தவருக்கு
தெரியாது !!நான்  நம்பாத
மனிதரே அவர் தான்
என்ற உண்மை.....

ரசிகன்

முண்டியடித்து அதிக
பணம் கொடுத்து
சினிமாப் படம் பார்க்கச்
சென்றவன் பாதியில்
கவலையோடு வீடு வந்தான்
என்னப்பா என்றால்
கவர்ச்சி நாயகி பட்டிக் காட்டு
வேடத்தில் வந்து விட்டாள்
என்றான்...


சந்தேகம்

என் மீது சந்தேகப்பட்டு
சந்தேகப்பட்டு
இப்படி
குடித்து குடித்து
என்னை சந்தேகப்பட
வைத்து விட்டாரே..


கணவன்

இப்படி அழகழகாய்
உடுத்தி உடுத்தி
என் காசையெல்லாம்
தண்ணியாய் கரைக்கிறாள்
இவள்...
ஏனடி என்றால்
அவள் அழகாயில்லை
என்று தானே என்னிடம்
வந்தீர்கள் என்கின்றாள்.....

காதலன்

ஐயோ! பாவம் என் காதலன்
அழகழகாய் உடுத்தி
என்னோடு திரிந்தவன்
பணத்திற்கு ஆசைப்பட்டு
பக்கத்து வீட்டுப் பணக்காரப்
பெண்ணைக் காதலித்து
இப்படி வேலைக்காரன்
ஆகி விட்டானே...



காதல்

உன்னைக் காகிதத்தில்
எழுதி எழுதி
காகிதக்குப்பைக்குள்
தொலைத்தால்
காகிதக்குப்பைகள் இருந்து
நீ என்னை தேடி 
காதலிக்கின்றாயே
என் காதலே.......

மனைவி 


எப்போது !!
திட்டினாலும்
சிரித்துக்கொண்டே
போகின்றாயே !!
ஏனடி என்றால்!
எப்போதும்
 எனக்குள் இருப்பதாக
 நீங்கள் தானே
சொன்னீர்கள் 
என்கின்றாள்
அதே சிரிப்போடு .........

ராதையின் விழி பேசும் சாரல்...............

அழகுத் தமிழ் சொல்லெடுத்து
மழைத்துளி நீரெடுத்து
நட்சத்திர ஒளியொடுத்து
ரோஜேப்பூ இதழெடுத்து
வாணவிலின் வர்ணம் தொட்டு
ராதையவள் வரைந்த கண்ணன் !!

மாயவுலகிற்குள் மாயமாய்
நின்று கேள்வியாய் அவளை
வைத்து வேடிக்கையாய்
மனதை வைத்து
கேலி பேசி கேலி பேசி
விளையாட்டாய் அம்பு விட்டு
அம்பு விட்டு வந்தவன்!!
இயப்பூவின் காதலால்
புல்லாங்குழல் இசையில்
புதுராகம் மீண்டுகின்றான்
ராதைக்காய்


************************************

ராதையின் கள்ளக்கண்ணன்
தன் புல்லாங்குழல் இசையால்
அவளை அழைத்து மாயங்கள்
பல செய்து காதல் மொழி
உரைக்க!
கருப்பிற்குள்அழகனாய்
வாழ்வின் துணைவனாய்
தன் அருகேஅவனிருந்து
ரசிப்பது புரிந்த ராதை
பெண்மையின் நாணத்தால்
தன் முகம் சிவக்க
விழியிரண்டும் கெஞ்ச
மொழியிருந்தும் மெளனமானாள்
அவன் சுவாசத் தீண்டல் பட்டு......
****************************************
அவளுக்குள் இருந்து
அவளோடு இணைந்து
போகும் திசையெங்கும்
வந்த கண்ணன் தன்
புழ்லாங் குழல் காற்றாய்
அவள் சுவாசம் எடுத்து இசையாய்
இசைத்து இசைத்து
தன் வசம் கொண்ட பின்பும்..
அவளை தவிக்க விட்டு தவிக்கவிட்டு

அவளோடு இருந்து கொண்டே
மௌனமாய் சிரிக்க..

கெஞ்சியவள் கண்களில்
வந்த கோவம்ஆண் மீதே தோன்ற
தன்னை சோதித்தவன்
கண்களை விட்டு மறைந்தாள்
கோவத்தில் ...

*****************************************
உனக்காய்  என்னை வைத்து
என் உயிரின் உணர்வாய் நீ
இருந்து
என்னை அறிந்து என் நிழலாய்
 என் பின்னோதொடரும் கண்ணா 

உனக்குமாடா
என் மனசு விளையாட்டுத் திடல்!!
கேட்காது தந்திடும்  மனசை
அறிந்தும் அறியாதவன் போல்
என்னிடமே திருட்டுத் தனமேனடா
 எனக்கேதெரியாமல் நீ உடைப்பது

 பால் குடம் மட்டுமில்லை        
என் மனசும் தானடா!!!
மீண்டும் மீண்டும்
உடைக்காதே என்னை!!
வதை பட்ட என் மனசு
தாங்காது துடிக்கின்றது உன்னால்.......................