Wednesday 4 August 2010

சிந்தும் இதழ் சிவத்திடும் சாரல்.......

 வாடகைத்தாய்.

பிரமா செதுக்கிய
அழகுப் பெண் ஓவியம்
குறை காண்டதால்
மனிதன் செதுக்கினான்
பிரமாவை பெண்   
ஓவியமாய்.... 

  வாழாவெட்டி   

சோகக் கதையின் கதாநாயகி
பலர் கண்களின் 
பரிதாபத் திருமதி                  
வாழ்கையோடு போராடினாள்
தன்னிலமை காத்திட- ஆனாலும்
மனித விஷப் பார்வை
நித்தம் நித்தம் பார்தனர்
அவளை மாதவியாய்..



பணத்தேடலில்
தொலைந்திட்ட பாவை
செவ்வாய் தோஷம் வந்து
மறைந்திட்ட உயிர் ஓவியம்
எதுகை மோனைக்காய்
வாழ்கின்றது பல காலம்


எழுதுகோல்

என்னை மட்டும் காதலிக்கும்
காதலன் இவன்!!
என் சுவாசம் உள்ள வரை என்
கூடவே நடப்பான் !!ஆனால்
நாளைய கோவலன்


காகிதம்

அவன் நினைவுகளை
கிறுக்கி கிறுக்கி!
உன்னைக் குப்பைத்
தொட்டியில் நான்
போட.....
அவனே!                                     
நான் கிறுக்கிய
உன்னைச் சேகரித்து சேகரித்து
என்னை குப்பைத்தொட்டியில்
போட்டு விட்டான்....


பொருத்தம்

மனசும் மனசும் சேர்ந்ததால்
காதல் வர

உறவும் உறவும் புரிந்து
மகிழ்ச்சி தந்து!
அவள் குறிப்பும் என் குறிப்பும்

பொருந்தவில்லையென
சங்கடமாக்கினார் ஐயா!! என் வாழ்வை!!!

சுமை

உனக்கு நான் சுமையென்றாய்
சரியென்றேன்
என்னால் வாழ்வே சுமையென்றாய்
பிரிந்து போனேன்
இன்னெரு உறவை தேடியதால்
நான் சுமையான கதை
இப்போது தான் புரிந்தது
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று.......


உரிமை

மூன்று முடிச்சு போட்டதும்
இப்படியிரு அப்படியிரு
அதைவிடு இதைவிடுயென
உனக்காய் என்னை மாறிய
உன்னால்....... முப்பது
வருடமாகியும் எனக்காய்
ஒரு கெட்ட பழக்கம் கூட
விட முடியவில்லையே...ஏன்


காயம்

பல பெண்களின் இதயத்தில்
காதல் அம்பை விட்டு
ரசித்த என் நண்பன்...
அவன் எய்த அம்பு
அவன் இதயத்தை
தைத்த போது வலியால்
மதுக் கடை தேடினான்
காயத்தை ஆற்ற......

உண்மை

சத்தியம் சத்தியமென
பிள்ளைமேல் சத்தியம்
செய்தார் என் கணவர்
சாயங்கால மதுக்கடை
திறக்கும் வரை..
சத்தியம் செய்தவருக்கு
தெரியாது நான் நம்பாத
மனிதரே அவர் தான்
என்ற உண்மை.....

ரசிகன்

முண்டியடித்து அதிக
பணம் கொடுத்து
சினிமாப் படம் பார்க்கச்
சென்றவன் பாதியில்
கவலையோடு வீடு வந்தான்
என்னப்பா என்றால்
கவர்ச்சி நாயகி பட்டிக் காட்டு
வேடத்தில் வந்து விட்டாள்
என்றான்...


சந்தேகம்

என் மீது சந்தேகப்பட்டு
சந்தேகப்பட்டு
இப்படி
குடித்து குடித்து
என்னை சந்தேகப்பட
வைத்து விட்டாரே..


கணவன்

இப்படி அழகழகாய்
உடுத்தி உடுத்தி
என் காசையெல்லாம்
தண்ணியாய் கரைக்கிறாள்
இவள்...
ஏனடி என்றால்
அவள் அழகாயில்லை
என்று தானே என்னிடம்
வந்தீர்கள் என்கின்றாள்.....

காதலன்

ஐயோ! பாவம் என் காதலன்
அழகழகாய் உடுத்தி
என்னோடு திரிந்தவன்
பணத்திற்கு ஆசைப்பட்டு
பக்கத்து வீட்டுப் பணக்காரப்
பெண்ணைக் காதலித்து
இப்படி வேலைக்காரன்
ஆகி விட்டானே...



காதல்

உன்னைக் காகிதத்தில்
எழுதி எழுதி
காகிதக்குப்பைக்குள்
தொலைத்தால்
காகிதக்குப்பைகள் இருந்து
நீ என்னை தேடி காதலிக்கின்றாயே
என் காதலே.......

மனைவி 

எப்போது திட்டினாலும்
சிரித்துக்கொண்டே
போகின்றாயே ஏனடி என்றால்!
எப்போதும் எனக்குள் நீ
இருப்பதாக நீங்கள் தானே
சொன்னீர்கள் என்கின்றாள்
அதே சிரிப்போடு .........

No comments: