Thursday 19 August 2010

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,

                                                                                                

நாதங்களில் அகம்
நளின  நடைபயில  
தடையின்றி  ஸ்ரங்கள் உன்னிடையே
  இசையாய் வந்தோட !

மெல்லினம் இடையினம்

மயிலினமாய்  நடைபோட !
துயிலினம் குயிலினத்தோடு
குழவிட !
கவியினம் கலையினத்தோடு இசைத்திட
 வானவீதியில் உலவும்  மனசு
மெல்லமாய் பாட! எந்தன்
 கால்கொலுசு  எந்தன்  உந்தன்
கானம் கேட்டு  அசைத்தாட
தனிமை கொன்று தவம் செய்து
இதயம் கண் மறந்து விழிதிறக்கு  உனக்காய்.............




யாழ்லெடுத்து நான் மீட்ட    
                                  அதில் சுரங்களாய் நீ மாற                                     
இசை கேட்டு   விண்மீன்கள்
எனை வாழ்த்த.....

அதைக் கேட்ட   உன் விழியோ  
உறங்காது  தவிக்க ...  தவிக்கும் 
விழியறியாது     என் விழியோ.. 
உன்னைத் தேட
விழி பார்த்து பிறை நிலா

உன் முகம் காட்ட.. பனிகால 

குளிர்காற்றின் வெப்பத்தீண்டலாய் 
                                  என் இசை  உனக்காய் அரங்கேற்றமாக !!                            

ஸ்வரங்களின் சுருதியில்

என் சுவாசம்   தாளத்தின்  மடியாய்   
உன் மடியில் கரைகின்றது
நின் மதியாய் !!
அலைமேல் மிதந்திடும்
பொம்மையின் அசைவாய்
என் உணர்வுகள்
உன் உணர்வில் 
இசையாய் கலையாய்  உணர்வாய்
அசைகின்றது
புது புது ராங்களாய்!!!



உலகத்து    உயிரை  
உனக்குள் மயக்கி
என்னையும் சிறையெடுத்து
எனக்குள் வாழும் அற்புத இசையோ!
என் இதயத்தின் ரணங்களை
மயிலிறகால் வருடி எனக்குள்
வாழும் அதிசய சுரமா நீ!
நான் கண்மூடி உன்னேடு
நடக்கையில் என் இதய
சுவரெங்கும் சுகமான உணர்வு
உயிராய் உயிர் பெற்று நிக்க
என் மனதில் தோன்றிய
ராகத்தின் தாலாட்டாய்
என் சுவாசக் காற்றில் கலந்திட்டு
என் கனவோடும் நினைவோடும்
நீயே தோன்றியதால்...
உனக்குள் நான் தொலைந்து
விழிமூடி கண்னுறங்கிட
உன்மடி தேடி நான் வந்தேன்
ஒர் குழந்தையாய்.....
********************************

என் இதயத்துடிப்பின்
ஓசை நிற்கும் வரை
உன் இசையின் ஓசை
என் இதய ஓசையாய்
மாறிட வேண்டும்

என் விழிகள் அதற்கு
அபிநயம் பிடிக்க
வேண்டும்

நான் சிந்தும் சிரிப்பு
என் இதழின் இசையாய்
மாறிட வேண்டும்

நான் வலி இல்ல இசையாய்
உன்மடியில்
உறங்கிட வேண்டும்

அந்த நிமிடத்து உறவாய்
நீயோ வர வேண்டும்

உன் இதயமே என்
கல்லறையாக வேண்டும்

அந்த நிமிடமே என் வாழ்வின்
கடசி நிமிடமாய் தோன்றிட
வேண்டும்

No comments: