Wednesday, 22 October 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்.......,

சிக்கிக்கொண்ட  சிக்கல் 

சிறைக்கதவுதான் 

 திறக்க வழிகளுமில்லைதான்! 

கைகளும் கட்டுண்டே 

கிடக்கின்றது   தான் 

அறிவின்  பாதைக்குள் 

பற்பல  வழிகள்  வழிமாறி 

கிடந்தாலும்  எனது 

மனமென்னும்  மந்திரக்கோல் 

சத்தியத்தின் இருளுக்குள் 

 பாதை தேடுகின்றது!

விடைகள்  இல்லாக்கேள்விக்குள் 

மனமென்னும் குழந்தை

கேள்வியாய்  நிக்கின்றது !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 விழிக்குளத்திற்குள் எழும்

நினைவலையின்  சத்தம் 

எழுமுன்  தாய்மாடியாகி 

தூங்கிட வைக்கின்றது 

இசை !!புயலும்  புரண்டு 

எழுவதுபோல்  வாழ்க்கை 

தடுத்தே  கரம் காத்திட 

இல்லாக் கனவிற்குள் 

கற்பனை  கண்டெக்கா 

காகிதத்பூ  குப்பைக்குள் 

போட்டும்  சிதையாமல் 

அப்படியே  கிடக்கின்றது 

தனியாய் !!!

Thursday, 16 October 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விழுந்தி விட்டவனை    எழுந்திட

 

விடாமல்  ஏறி மிதிக்கும் 

மனிதநேயம்!  பெரியாரை 

குற்றம்  சொல்வது  வேடிக்கையே 

தடுத்து தள்ளிவிட்டு   குழிபறிக்கும் 

மனிதநேயம்!தமிழ்ப்பெருமை 

பேசுவது  வேடிக்கையிலும்  வேடிக்கையே  !!    

குட்டிக்குட்டிச் சாரல்......,

பைத்தியக்காரனை  

வைத்தியம் 

செய்து  காப்பாத்திட 

நினைத்தால் 

செலவுசெயுங்கள்

  உங்கள் 

நிமிடத்தின்  பொன்னை!!

 பொன்னும்  மண்ணும் 

நம் சொந்தமானது !!!

Thursday, 9 October 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இன்னும் !

யாரார் யாரெல்லாம் 

என்னை!

தண்டிக்கவேணுமோ 

நான்!அறியேன்  

இன்னும்! என் 

பாவக்கணக்கு முடியவில்லை 

என்பதை மட்டும்  

என்  உடல்சுமக்கும் 

உயிர்  சொல்கின்றது!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

அதிகமாய்  இப்போது! 

சொல்லிக்கொடுக்கும்   இடத்தில்  

தலைவனை காணோம் 

வீட்டிலும்   நாட்டிலும் !

அதிகமாய்  இப்போ!! 

கற்றுக்கொள்ளும் இடத்தில்  

பொறுமையின் தலைவியை  

வீட்டிலும்  நாட்டிலும் 

காணோம்  இப்போ !!! 


குட்டிக்குட்டிச் சாரல்......,

படைத்தவனிடம்  காத்திடும் 


நீதியை  படித்தவன் கற்றிட்டதால் 

வீழ்ந்திடும்  நீதியை பாமருக்கும் 

சொல்லிக்கொடுக்கின்றான் எழுந்திட 

முடியாமல்!! 



Saturday, 4 October 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நெற்றிக்கண்  திறப்பினும் 

குற்றம்  குற்றமே  என்ற  நிலத்தில் 

  குருட்டு நீதியின் 

வரலாற்று  சாதனைகள் 

மக்கள்  உயிர்வதைத்து 

வரத்தையாலத்தில்  நீதியின் 

உச்சம்  தொட்டு 

வாக்குவங்கி திறக்கின்றது! 

மனிதா!பதவியில்  இருப்பவனுக்கு 

  பதவியில் இல்லாதவனுக்கும் 

வேறுபாடு  தெரிந்தால் 

உண்மையை   காப்பாத்திட 

முன்னால்  வந்து  பேசு  !!

 


Wednesday, 1 October 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்  கண்ணீர்

விழும்போது 

ஏந்திட யாருமில்லை என்பதை 

 கண்கள்  புரியாமல் 

அழுகின்றது !எப்படி 

சொன்னால்  புரியும் 

என்  கண்களுக்கு!  



 

குட்டிக்குட்டிச் சாரல்......,

நாம்  முட்டாளாய்  

இருக்கும் 

வரை  யாராலும் 

நம்மை  காப்பாத்திட 

முடியாது!  

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நிரந்தரமில்லா மனிதனின் 

ஆசைப்பசிக்கு போதைபசி 

தீனிபோடுகின்றது !


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சாக்கடைக்குள்  எந்த 

வாசணை  கலந்தாலும் 

சாக்கடைகளே  பெரிதாதாய் 

வீசும்  இங்கே  

மரணங்கள் புதைக்கப்படும் 

 உண்மைகள் ஊமையாகும்

  வீரன் கோழையாவன் 

அறிவிலிகள்  அச்சம்

கொள்வார்  அறியாமை

ஆர்ப்பரிக்கும்   தவறுகள் 

சரியாகும்  சரிகள் 

தவறாகும்   தவறால்
தலைவன் 

கொள்கை இழக்க  இலக்கு 

இயலாமையிடம்  மண்டியிடை 

எந்தவர்ணமானாலும்  

விழுந்தபின்னர்  ஒரே 

நிறமே !!மாயைக்குள் விழுந்த  

  மனிதனை  எந்த மரணஓலமும் 

சிந்திக்க  வைக்காது !!! 

நல்ல  மனிதனேயானாலும் 

ஐந்து வருடத்தில்  மாறிடுக்க 

மனிதா!!!