Saturday, 17 October 2020

கண்ணீர் அஞ்சலி!!!

உறக்கமும்  விழிப்பாய் 
 இருள்வாங்கிய  நினைவாய் 
கடந்ததோ   இரவு !ஏன்?
இறப்பின் படிகளில் ஓய்வாய்
 ஒரு பயனம் !
இருந்தும் வலிக்குதே ஏன்?
எட்ட நின்று என்னை மறந்து
 ரசித்தமுகம் உமதோ!!
தண்டித்த  வேளையிலும் 
தண்டிடாதே பார்த்த முகம் தானே!


நேர்கொண்ட பார்வை
 நேரெதிரே நிற்க 
பயம் வரும் யாருக்கும்
கம்பீரக்குரல் கேட்டு 
பாதங்கள் தடைபடும் தானாய் !
அச்சங்கள் அறியா மனசு
கண்டு  
அச்சப்படுவர் தவறுயிழைத்தவர்  
கற்றவர் கல்வியாய்
  கற்பனையில் கூட தவறிடா 
வாழ்க்கைகே வழியானார்!! 
வாழ்த்தவர் பெருமைக்கு 
 சொல்லானார்
வெற்றிலை சிகப்பழகில்  
சிந்திடும் புன்னகை தவமாமானவர்  !
 கையில் பிடித்திடும்
தடியில் பல ஆண்மைகளின் 
வரலாறுண்டு!!
வியக்கின்றது விழிகள் 
விந்தை மனிதன்
கரம்பிடித்தே நடந்த 
நாட்களை  சிந்தித்தால்
வரலாற்றுப் பொக்கிசம் !
 விதியிடம் கைதியாகி 
எழுத்தால் எழுதா ஓவியமாய் 
எழுந்தே நிக்கின்றது!!
உயரமாய்!!!

No comments: