யார் கனவையழித்ததுமில்லை
அழித்தவர் முகம் கண்டு
அழுததுமில்லை
அடுத்தவர் வாழ்வை கெடுக்கவுமில்லை
கெடுத்திட ஒர்முகம்
படைக்கவுமில்லை
ஒருமுகம்
மறைக்கவுமில்லை
பிறர்வாழ்வை பறிக்கவுமில்லை
பணத்திற்காய்
முகத்தனை
மாற்றியதுவுமில்லை
பகைசோர்த்து யார்முகதையும்
வஞ்சித்ததில்லை
இகழ்தவர் முகம் தேடியதுமில்லை
புகழ்தவர் நட்புமுகம்
கொண்டதவுமில்லை
பிடித்தவர் முகம்மறந்ததுமில்லை
மறந்தவர் சொன்ன பொய்களை
நம்பியதுவுமில்லை
ஏமாற்றி வாழ ஓர்
முகமுமில்லை
ஏமாற்றியவர்கண்டு ஓடியதுவுமில்லை!!!
முகமின்றிய வாழ்வில்
முழுமையுமில்லை
முழுமையில்லா வாழ்வில்
உறவுமில்லை !ஓர்
முகமில்லா முகதிற்கு
முவரியுமில்லை
முகவரியற்ற முகத்தினை
சிறையெடுக்கும் எப்பவும்
கல்லறையே!!!!கல்லறை கொடுக்கும்
முகமே கடசியில் நியமான முகமாகும்!!
No comments:
Post a Comment